இதுவரை பார்த்தவர்கள்

Sunday, 3 May 2020

Kanthar Kotta Manimalai 29






குரு என்ற பதத்திற்கு அர்த்தம் இருளை நீக்குகிறவர் என்பதாகும்

மாகாகுரு வள்ளல்பிரானும் நம்மைப்போன்ற சீடர்கள் பக்குவம் அடைவதற்காக நமது குறைகளை தனது குறையாக பாவித்து நம் கஸ்ட நஸ்டத்தை இறைவனிடம் ஒப்புவிக்கிறார்

இறைவன் மனம் திருந்துவோர்க்கு மிக சமீபமாக இருப்பார் என்பது இயேசுவின் வாக்காகும்

தன்னை உணர்ந்து தனது இயலாமையை ஒப்புவிப்போருக்கும் இறைவன் மிக மிக சமீபமாக இருப்பார்

வள்ளல்பிரானும் மனம் கசந்து இறைஞ்சுகிறார் என் உள்ளம் என் பேச்சை கேட்பதில்லை அது என்னை வம்பாக கவிழ்த்து விடுகிறது

பக்குவப்பட்ட ஞானிகளுக்கு மனம் கைவசப்படும் ; நம்மைப்போன்றோருக்கு கைவசப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல

மனம் மிக சிறந்த கார்ப்பரேசன் குப்பைத்தொட்டி எதைவேண்டுமானாலும் தனக்குள் இழுத்து கொட்டிக்கொள்ளும்

நாம் தற்செயலாக காதில் கேட்ட ஒரு விசயம் நமக்குள்ளிருந்து திடீரென வெளிவந்து நம்மை செய்யவைத்து விடும்

வள்ளலார் விண்ணப்பிக்கிறார் என் தொல்லை வினைகள் கர்மங்கள் என்னை விடுவதாக இல்லை

அதுதான் அப்படியா நாம் எவ்விசயத்தில் தடுமாரி தடுமாறி விழுகிறோமோ அதில் பக்குவப்பட்ட முன்னோடி ஒருவரை நாம் சந்தித்து அவர் நமக்காக இறைவனிடம் பரிந்துரைத்து வேண்டினால் நிச்சயம் இறைவன் நம்மை விடுவிப்பார்

அப்படிப்பட்ட முன்னோடிகளாவது எனக்காக பரிந்துரைத்து மன்றாடுகிரார்களா என்றால் அதுவும் எனக்கு இல்லை

இந்த பராரிக்கு எதற்காக இறங்கினாய் என வழக்காடுகிரவர்களாவது இருக்கிறார்களா எனவும் தெரியவில்லை

இறைவா நீ வன்மனத்தவனும் இல்லை உன்னை மன்றாடினால் இல்லை என்றும் சொல்லமாட்டாய்
வளத்தை அருள்வதும் என் மாயை அருகுவதும் ஒன்றாக நடக்கும் காரியம்

என் மாயைகளை கடந்து வென்று உன் பேரருளை நான் பெற்றுக்கொள்ள அருள் புரிவாயாக



No comments:

Post a Comment

முன்னுரை

சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் 9 வயதில் பிராட்வேயில் இலக்கணம் படிக்கும் படியாக பச்சயப்ப முதலியாரிடம் சேர்...