இதுவரை பார்த்தவர்கள்

Sunday, 3 May 2020

Kanthar Kotta Manimalai 27






பூமிக்கு வருவிக்க உற்றவர் வள்ளல்பிரான்

மனித சரீரத்தில் வந்திருந்தாலும் அந்த 6 வயதிலும் தான் மரணமில்லா பெருவாழ்வு பெற்றவர் என்ற சுயாதீனம் இருந்திருக்கிறது

பிரமன் என்னை பிறப்பிக்க வல்லவனோ என்கிறார்

சரி எமதர்ம ராஜா இருக்கிறாரே அவரால் மரணம் நேர கூடுமல்லவா

வள்ளலார் சொல்கிறார் ; ஏற்கனவே நான் மரணமில்லா பெறுவாழ்வு அருளப்பட்டு விட்டேன்

முன்பொருமுறை வழக்கம் போல என்னை மரணத்தில் ஆழ்த்த வந்து எமன் பட்ட வடுவை அவர் மறந்திருக்க மாட்டார்

இப்படித்தான் ஞானிகள் தாங்கள் யார் என்பதை சூசகமாக அறிவிப்பார்கள்

மார்க்கண்டேயனாக தான் அவதரித்திருந்த போது தன்னை மரணத்திலிருந்து விடுவிக்க அதிதேவர் சிவன் வந்தாரல்லவா அப்போது எமனுக்கு பட்ட வடுவை அவர் மறந்திருக்க வாய்ப்பு இல்லை

சரி மனித சரீரத்தில் வந்ததாலேயே வந்து பற்றுகிற மாயைகள் ; அவைகளால் நான் செய்த செய்யப்போகிற வினைகள் என்னை வந்து கெடுத்துவிட வாய்ப்பு உள்ளதல்லவா

நாள் என் செய்யும் பெற்ற வினைதான் என் செய்யும் குமரேசர் இருதாளும் தண்டையும் சிலம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே என திருப்புகழ் உள்ளதல்லவா

அதே கருத்தை வள்ளல் நம்பிக்கையோடு பறை சாற்றுகிறார்

குரு பார்க்க கோடி பாவம் தீரும்

அந்த சற்குருநாதன் முருகனை குருவாக பெற்றிருக்கிறேன் ; அவனின் அருளில் கலந்து நிற்கிறேன்

ஆகவே வினைகளைப்பற்றி நான் கவலைப்பட அவசியமில்லை

இரவுநிறம் உடைஅயமன் இனிஎனைக் கனவினும்
இறப்பிக்க எண்ணம்உறுமோ
எண்ணுறான் உதைஉண்டு சிதைஉண்ட தன்உடல்
இருந்தவடு எண்ணுறானோ

இது வள்ளலார் பாடிய வரிகள்

தன்னை மரணத்திற்கு ஆட்பாடுத்தும்படி எமன் கனவிலும் எண்ணமாட்டார் . ஏனென்றால் ஏற்கனவே ஒரு முறை அவருக்கு காயம் உண்டானதை அவர் மறக்கமாட்டார் என்கிறார்

இது ஆதாரம்



No comments:

Post a Comment

முன்னுரை

சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் 9 வயதில் பிராட்வேயில் இலக்கணம் படிக்கும் படியாக பச்சயப்ப முதலியாரிடம் சேர்...