வள்ளல்பெருமான் சாதாரண மனிதர்களின் மன மாயைகளை விட முடியாமல் தானும் தவிப்பதுபோல இறைவனிடம் முறையிடுகிறார்
சிறு வயதிலேயே அதிதேவர் நாராயணியே அண்ணியைப்போல வந்து உணவிடுவதை உண்டு வளர்ந்தவர் பெருமான்
அருள் உணர்வும் கலந்து ஊட்டப்பட்ட உணவை உண்ட பெருமான் காலம் கடந்துதான் அது ஒற்றியூர் வடிவாம்பிகை என்பதையுணர்ந்து அக்கோவிலில் சென்று அன்னையோடே தரித்திருக்கவும் தொடங்கினார்
வடிவாம்பிகை மணிமாலை பாடல்களை படித்தால் அப்பழுக்கில்லாத அன்னையின் அழகை அருளை பெருமானார் அனுபவித்தார் என்பது விளங்கும் . அத்தகையோரை அழியும் உடலின் ஆண்பெண் பேதங்கள் பாதிக்கவே பாதிக்காது
அபிராமி அந்தாதி
70: கண்களிக்கும்படி கண்டுகொண்டேன், கடம்பாடவியில் பண்
களிக்கும் குரல் வீணையும், கையும் பயோதரமும்,
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்க்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.
71: அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள், பனி மா மதியின்
குழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொம்பு இருக்க--
இழவுற்று நின்ற நெஞ்சே.-இரங்கேல், உனக்கு என் குறையே?
மாசு மறுவற்ற அழகு காமக் கிளர்ச்சி கொடுக்காது . தெய்வீகமே நிரம்பித்ததும்பும்
நிறைகுடம் ததும்பாது
குறைகளே மனிதர்களின் மனங்களில் காமக்கிளர்ச்சியை உண்டாக்குகின்றன
வள்ளல்பெருமானும் மனிதர்கள் படும் பாட்டை குறையாக ஒப்புவிக்கிறார்
வனிதயைர்கண் வலையினில்
பட்டுமதி கெட்டு ழன்றே
பாவமே பயில்கின்ற தல்லாது நின் அடிப்பற்ற அணுவும் அறிகிலேன்
இறைவனிடம் தாழ்மையாக நம் குறைகளை ஒப்புவித்தால் விடுபடும் வழியை அவரே உண்டாக்குவார்
No comments:
Post a Comment