இதுவரை பார்த்தவர்கள்

Sunday, 3 May 2020

Kanthar Kotta Manimalai 26






சேவல் கொடி உடையவன் முருகன்

ஏனிந்த சேவல் கொடி

சூரன் என்ற அசுரனை வென்ற முருகன் அவனை கொல்லவில்லை

பதிலாக அவனை திருத்தி ; பிறரை விளிப்படைய செய்யும் ஆசிரியனாக மாற்றிக்கொண்டார் முருகன்

இதுவே நற்செய்தி

14. இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.

ஞானம் என்பது ஒன்றுமே அறியாமல் தூய்மையாக இருப்பது அல்ல

புத்தம் புதிதாக படைக்கப்பட்ட மனிதன் இயல்பில் சுத்தமானவனாக இருப்பான்

ஆனால் அவனுக்கு எந்த அனுபவமோ ஞானமோ இருக்காது

யார் சகல தவ்ருக்குள்ளும் விழுந்து ; அதன் நன்மை தீமை அனுபவங்களை உணர்ந்து ; அது இருந்தாலும் வேண்டாம் என்ற நிலை அடைகிறானோ அப்போதே ஞானம்

இப்படி உலக வாழ்வின் அழகுக்கும் ; மாயைக்கும் இடம் கொடுத்து ஆட்டம் ஆடி அசுரனைப்போல ஆனாலும் ; அவனை ரட்சிக்கும் படியாக குரு வருவார்

ரட்சித்தாலே சேவலம்

அது கூவி கூவி நம்மை விழிப்படைய செய்யும்

ஆகவே நம்மை ரட்சிப்பதை தனது தொழிலாக கொண்டவர் ஞான சற்குரு முருகன்

அவரை விட்டுவிட்டு மற்ற தேவர்களை பக்தி செய்வோர் ; சிறு மதியுடைய காக்கை போன்றவர்கள்

செங்கனி இருக்க காக்கை வேப்பங்கனியை நாடி உண்ணுமாம்

9 வயது பிள்ளையாக கந்தர் கோட்டம் சென்று அடிக்கடி முருகனை வழிபட்டு வந்தார் வள்ளலார்

பிறவிக்குணம் என்பார்களே அது 9 வயது முதல் சித்தி ஆகும் வரை வள்ளலார் கூட இருந்தது

முதலில் முருகன் ; வடிவாம்பிக்கை இப்படி படிப்படியே ஒவ்வொரு தேவரின் தொடர்பும் அனுபவமும் உண்டாகும் போதும் ; அவரைப்போல உண்டுமா என பாடியிருப்பார் வள்ளலார்

கடைசியில் 6 ஆம் திருமுறை பாடும்போது அருட்பெருஞ்ஜோதியோடு தொடர்பு கிடைக்கிறது ; உடனே இவரைத்தவிர வேறு யாரையும் கும்பிடாதே ; வேஸ்ட் ; பிட்சு ; உடைப்பிலே போடு என பாடிவிட்டார்

இது வள்ளலாருக்கு மட்டுமல்ல ; கவிஞர்களுக்கே உரிய புகழ்ச்சி அணி

இது பெருமையாக சொல்லப்பட்ட ஒரு விஷயமே தவிர ; அப்படியே வார்தையின் படி பொருள் சொல்லக் கூடாது

6 ஆம் திருமுறையில் மட்டுமல்ல ; முதல்முதலாக 9 வயதில் பாடியபோது கூட முருகனைத்தவிர யாரையும் கும்பிட வேண்டிய அவசியம் இல்லை என்றுதானே பாடியுள்ளார் என்பதை சன்மார்க்கிகள் கொஞ்சம் நிதானிக்க வேண்டும்

நன்றாக பாருங்கள் முருகனைத்தவிர வேறு தெய்வத்தை சிந்தை செய்வோர் காக்கையை போல சிறு மதியாளர்கள் ; நவநாகரீக பேயர்கள் ; வீணர்கள் என வரிசையாக அர்ச்சித்திருக்கிறார் பாருங்கள்

இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது ; கவிஞர்களுக்கே உரிய உயர்த்திப்பாடுதல் அவ்வளவே

மற்றவர்களை ஒதுக்கு என எடுத்துக்கொள்ளவே கூடாது ; அவர்களோடு அருட்பெருஞ்ஜோதி வழிபாட்டை முக்கியப்படுத்து என்பதே ஆகும்

எதையாவது ஒதுக்கு என்றாலேயே அங்கே தீவிரவாதம் வந்துவிடுகிறது

மற்ற மதங்களையெல்லாம் ஒதுக்கு ; சன்மார்க்கத்தை மதமாக பிடித்துக்கொள் என்பதுபோல மதவெறி பிடித்தவர்களாக ; பிற மதங்களை அதை வளர்த்த அருளாளர்களை அற்பமாக எண்ணுகிற மத துவேஷம் சன்மார்க்கிக்களை பிடித்துக்கொண்டது

இதற்கு காரணம் அடிப்படையில் வள்ளல்பெருமான் பக்தி யோகி என்பதை சன்மார்க்க மடத்தை இடிக்க வந்து டேரா போட்டுள்ள நாத்தீகவாதிகள் உணரவில்லை

சும்மா வாயிலே அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என ஒரு லட்சம் தடவை ஒப்பித்தாலும் அங்கு பக்தி வர வாய்ப்பு இல்லை

ஆகவே நாத்தீக கசடர்கள் ; நல்ல மடமடா என சன்மார்க்கத்தில் புகுந்து ; ஆளாளுக்கு பத்து பாட்டுக்கு விளக்கம் சொல்லி சன்மார்க்கிக்களின் ஜீவனை கெடுத்து விட்டார்கள்

குரான் 2:14. இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) பக்தி கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, “நாங்கள் பக்தி கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்” எனக் கூறுகிறார்கள்


No comments:

Post a Comment

முன்னுரை

சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் 9 வயதில் பிராட்வேயில் இலக்கணம் படிக்கும் படியாக பச்சயப்ப முதலியாரிடம் சேர்...