உண்டு உண்டு உண்டு உண்டு
27 முறை உண்டு உண்டு என 9 வயதிலேயே வள்ளலார் பாடியிருக்கிறார்
அருளாளர்கள் பிறவியிலேயே ஞானம் ; புலமை உடன் பிறக்கிறார்கள்
இப்படி பாடியவரை பார்த்த பிறகு அந்த இலக்கண வாத்தியார் என்ன சொல்வார்
ஐயா ! உங்கள் தம்பிக்கு பாடம் சொல்லிக்கொடுக்க எனக்கு தகுதியில்லை என கையெடுத்து கும்பிட்டுவிட்டு போய் விட்டார்
இந்த அமானுஷ்ய தம்பியை என்ன செய்வது என தெரியாமல் அவரும் தண்ணீர் தெளித்து விட்டு விட்டார்
அவரை அவரது ஆவிமண்டல குருநாதர் தனிகைமணி பிரானே ரகசியமாக வழிநடத்தினார்
இந்த தனிகைமணியாரே சாலையாரையும் வழிநடத்தியவர்
சாலையார் ஒரு கவியில் தனிகைமணியாரை முகமது சாலிக் என சொல்கிறார்
முகமது சாலிக் என்ற அரேபியா அருளாளர் ஒருவர் இறை நெறியில் தேறியபோது இறைவன் அவரை தமிழகம் சென்று திருத்தணி முருகனிடம் கற்றுத்தேறுக் என அனுப்பியதால் திருத்தணி குகை ஒன்றில் பல்லாண்டு தியானம் செய்து பிரணவ தேகம் சித்தித்து தன்னை தனிகைமணி பிரான் என சொல்லிக்கொண்டார் என்பது மரபு
இவர் வள்ளலாரையும் சாலையாரையும் தயாரித்து வழிகாட்டியதாகவும் மரபு
இருவரும் ஒரே கொடியை ஏற்றியுள்ளதும் ; வரப்போகிற ஆண்டவர் பலரை உயிர்த்தெழ செய்வார் என்றதும் அறிக
வள்ளலாரும் சாலையாரும் ஒருவரை ஒருவர் கணடதில்லை என்பார்கள்
ஆனால் ஞான வழி செய்தி யாதெனில் ; தனிகையார் பரமேறுமுன்பு இருவரையும் செஞ்சி மலைக்காடுகளில் அழைத்து உபதேசித்ததாக ஒரு குறிப்பு உண்டு
செஞ்சியிலிருந்து திருவண்ணாமலை நோக்கி பேருந்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு பயனித்துக்கொண்டிருந்த போது மலை உச்சியில் தெரியும் ஒரு சதுர கட்டிடம் ; முருகன் கோவில் என்றும் அங்குதான் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகவும் தரிசனம் ; ஏஞ்சல் டாக் கேட்டேன்
பிறிதொரு சமயம் நானும் சில சன்மார்க்கிக்களும் காரில் பயணித்த போது அக்கோவிலின் அடியில் சாலையில் காரை நிறுத்தி அங்கிருந்தவாறே தியானித்து பெரும் ஆற்றலை கிடைக்கவும் பெற்றேன்
இன்றைய சன்மார்க்கிக்கள் தனிகைமணியாரின் குருகுலம் யுக மாறுதலுக்கான ஒரு திட்டத்தை தயாரித்து வருகிறது ; வரப்போகிற சமரச வேதம் ; சகல புற சமயங்களையும் நல்லிணக்கப்படுத்தும் பணி என்பதை இன்னும் உணரவில்லை
அவர்கள் இன்னும் ஒரு புது மார்க்கத்தை உற்பத்தி செய்து ; மத சண்டை குழப்பம் செய்யவே முற்படுகிறார்கள்
ஆனாலும் சமரச வேதாந்தியின் வருகை நிச்சயம்
No comments:
Post a Comment