உழல்கிறேன் என்றால் விலகவும் முடியாமல் சாதிக்கவும் முடியாமல் ; மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாத ஒரு நிலை
உழுதவனுக்கு தார்க்கம்பு மிஞ்சுமா என்று கேட்பார்கள்
மற்ற எல்லா தொழில்களிலும் 90% பாதுகாப்பு உண்டு . திட்டமிடுதலில் பலனும் கிடைக்கும்
ஆனால் என்ன பாடுபட்டாலும் பலனில் நம்பகத்தன்மை இல்லாத ஒரே தொழில் விவசாயம்
சுழன்றும் ஏர் பின்னது உலகம் என பெருமையாய் பேசலாமே தவிர சாபத்தீடான தொழில் போலத்தான் விவசாயம் இருக்கிறது
இதற்கு உண்மையான காரணம் ஆதிமனிதன் இறைவனை சார்ந்து சரணடைந்து வாழ்வதை ஒதுக்கி சுய அறிவை திறமையை நம்பி வாழ்வோம் என முடிவெடுத்தானோ அப்போது பரத்திலிருந்து அவனை பூமிக்கு அனுப்பும்போது இறைவன் சில சாபங்களை கொடுத்தார்
அதில் மிக முக்கியமானது :
17. பின்பு அவர் ஆதாமை நோக்கி: பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.
18. அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.
நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த நீ பாடுபட்டாலும் விவசாயம் முள்ளும் குறுக்கும் தானே தருகிறது . இறைவனின் சாபம் உள்ளது என்பதாலேயே வள்ளல்பெருமானும் உழல் உற்ற உழவு என்கிறார்
ஆனால் பயிர்வகைகளை நீ உண்டுகொள்க என்பதே இறைவனால் வழங்கப்பட்ட உணவு
19. நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
மனித சரீரம் மண்ணிலிருந்து உண்டானது . அதனால் மண்ணிலிருந்து உண்டாகும் பயிர் வகைகளை மனிதன் புசித்தால் அது ஒவ்வாமையை உண்டாக்காது
ஆனால் விலங்குகள் மனிதனுக்கு மாறுபாடான சரீரங்கள் உடையவை
பயிருக்கும் உயிர் இருக்கிறதே ; அதையும் கொலை செய்துதானே உண்கிறோம்
முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு கத்தியை தீட்டு நாவுக்கு ருசியாக மசாலா தயார் செய் என அறிவுஜீவிகள் சொல்கிறார்கள்
மண்ணுக்கு மண் ஏற்புடையது ; சத்வ குணங்களை உண்டாக்க கூடியது
ஆனால் மாமிசம் தமோ மற்றும் ரஜோகுணம் உண்டாக்கும்
இறைவனை சரணடைந்து வாழ கற்றுக்கொண்டால் அவர் கொடுத்த உணவு அமிழ்தம் .மண்ணான ஸ்துல சரீரம் ஆவிக்குரிய ஒளி தேகமாக மாற்றப்படும்
15. ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்.
16. இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை.
மரணமில்லா பெருவாழ்வு பெற்றுகொண்டால் சகலமும் இறைவனால் நமக்கு கொடுக்கப்படும்
அதுவரை
கண்டதெல்லாம் அநித்தியமே
கேட்டதெல்லாம் பழுதே
கற்றதெல்லாம் பொய்யே
நீர் களித்ததெல்லாம் வீணே
உண்டதெல்லாம் மலமே
உட்கொண்டதெல்லாம் குறையே
உலகியலீர் இதுவரையும் உண்மையறிந்திலீரே........ என்கிறார் பெருமானார்
பல தொழில்களை செய்து மலம் ஒத்த பல பொருட்களை சம்பாதித்து வயிற்றிலே சோறை அடைத்து ஓதி போல உடம்பை வளர்த்துக்கொண்டுள்ளேன்
அந்தோ எத்தனை பிறவி வளர்த்தாலும் அந்த உடம்பு நிரந்தரமானதல்ல .
அதை பொய் என உணரமுடியவில்லையே
மெய் ஞானிகளின் வார்த்தைகளோடு உணர்வோடு இந்த பாடல்களை நாமும் கேட்டு கேட்டு உணரலாம் ; உள்ஞானம் விளையும் என்பதாலேயே நமது இயல்புகளை தன் இயல்பு போல பெருமானார் ஏற்று ஏற்று பாடியிருப்பார்
சாதாரண மனிதர்கள் நேரடியாக அருட்பெருஞ்சோதி இறைவனோடு தொடர்பு கொண்டு கருணையை பெறுவது அவ்வளவு எளிதல்ல .
ஏனென்றால் பிரார்திக்கிற நமது ஆத்மாவில் இன்னும் என்ன என்ன பாவங்கள் சாபங்கள் இருக்கிறது என நமக்கு தெரியாது ; ஆனால் இறைவன் நன்கு அறிவார்
அவர் நம்மை பார்க்கும் போது நமது களைகளும் அவரது கண்ணுக்கு தெரியும்
இறைவனுக்கும் நமக்கும் இடையில் கருணையுள்ள சற்குரு முருகனை நாம் துணைக்கு அழைத்தாலோ அவர் நமது களைகளை களைந்து நம்மை இறைவனோடு ஒப்புரவாக்குவார்
வள்ளல்பெருமான் அருட்பெருஞ்சோதி வழிபாட்டுக்கு மாறியது கொஞ்ச காலமே ; ஆனால் அதைவிட பத்து மடங்கு காலம் அவர் தேவர்களை வழிபட்டுக்கொண்டிருந்தார் ; படிப்படியே முன்னேறி கடைசியாக முழுமையான இறைவனிடம் வந்து சேர்ந்தார்
அறிவுக்கொளுந்துகளான சன்மார்க்கிகள் வள்ளல்பெருமான் அறியாமையால் பீடிக்கப்பட்டு தேவர்களை வழிபட்டுக்கொண்டிருந்தார் ; ஞானம் அடைந்தவுடன் அதை விட்டு விட்டு அருட்பெருஞ்சோதி வழிபாட்டுக்கு மாரிக்கொண்டார் என்கிறார்கள்
அதனால் ஞானிகளான நாங்கள் அருட்பெருஞ்சோதியை தவிர அந்த தேவர்களை உதவிக்கு அழைக்க மாட்டோம் ; நாங்கள் பெரிய ஆளுகளாக்கும் என மேதா விலாசத்தை காட்டிக்கொள்கிறார்கள்
வள்ளல்பெருமானே அப்படித்தான் முன்னேறி வந்திருக்க உன்னைப்போன்ற அற்ப மனிதன் தாழ்மையோடு தேவர்களின் நாமத்தினால் அருட்பெருஞ்ஜோதியிடம் கருணை வேண்ட வேண்டுமா அல்லவா ?
சுத்த மாயை சன்மார்க்கிகளை அகம்பாவிகளாக மாற்றி டேப் ரிகார்டுகளாக மாற்றி வைத்திருக்கிறது
வள்ளல்பிரான் வாழ்க்கை நம்மைப்போன்றோருக்கு தெளிந்த கண்ணாடியாக இருக்கிறது
அவர் பரமண்டலத்தில் எல்லா தேவர்களோடும் ஒப்புரவு ஆகி அவர்களின் நல்லாசியோடு உன்னதமான அருட்பெருஞ்சோதியை கண்டறிந்து ஒப்புரவு ஆனார்
நம் பிறவியில் குடும்பத்தில் ஏற்கனவே உள்ள அதிதேவர்களை ஒதுக்காமல் அவர்களின் நாமத்தால் இறைவனை வழிபடுகிறேன் என காலை மாலை இருவேளையாவது சொல்லிவிட்டு பிறகு அருட்பெருஞ்சோதியை பலமுறை வழிபாட்டு பாருங்கள்
பல தடைகள் நீங்கி விரைவில் மேன்மை பெறுவீர்கள்
அதிதேவர்களின் நாமத்தால் இறைவனின் பேரருள் நம்மை நிரப்பட்டும்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
No comments:
Post a Comment