இதுவரை பார்த்தவர்கள்

Sunday, 3 May 2020

Kanthar Kotta Manimalai 24







கற்றமே லவரொடும் கூடிநில் லேன்கல்வி
கற்கும்நெறி தேர்ந்துகல்லேன்
கனிவுகொண் டுவதுதிரு அடியைஒரு கனவினும்
கருதிலேன் நல்லன்அல்லேன்
குற்றமே செய்வதென் குணமாகும் அப்பெருங்
குற்றம்எல் லாம்குணம்எனக்
கொள்ளுவது நின்அருட்குணமாகும் என்னில்என்
குறைதவிர்த் தருள்புரிகுவாய்

பெற்றமேல் வரும்ஒரு பெருந்தகையின் அருள்உருப்
பெற்றெழுந் தோங்குசுடரே
பிரணவா காராரின் மயவிமல சொரூபமே
பேதமில் பரப்பிரமமே
தற்றகைய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே. - 24

சன்மார்க்கத்தின் இன்றைய முக்கியமான குறைபாடு கிணற்றுத்தவளை மனப்பான்மையாகும்

எப்படியோ வள்ளல்பெருமானின் மீது பற்று வைத்துவிட்டனர் . அபிமானமும் பக்தியும் உண்டு

அதனால் ஆளாளுக்கு நாலு பாட்டு ; பத்துபக்கத்துக்கு விளக்கம் என சொல்லிக்கொண்டு தங்களுக்கு தெரிந்ததை மட்டுமே ஒப்பித்துக்கொண்டுமிருப்பார்கள்

அடுத்தவர் என்ன சொல்கிறார்கள் ; அவர்கள் ஆதாரம் காட்டும் வேதங்களில் என்ன இருக்கிறது என காதுகொடுத்து கேட்கமாட்டார்கள்

எங்க குரு பெரியாளு இப்படி பாடிட்டாரு அப்பிடி பாடிட்டாரு என வெட்டிபெருமை பேசி பேசி தாங்களும் பெரிய ஆளு ஆகிவிட்டோம் என்ற மாயை பலரை பிடித்து வாட்டிக்கொண்டுள்ளது

தனது சீடர்களுக்கு இந்த மாயை பிடிக்கும் என தெரிந்த பெருமானார் அதை தனது குறையாக எடுத்துக்கொண்டு

வேதங்களை கற்றமே லவரொடும் கூடிநில் லேன்கல்வி கற்கும்நெறி தேர்ந்துகல்லேன் என வருந்துகிறார்
கிராமத்தில் சொல்வார்கள் ஒன்று சுயபுத்தி வேண்டும் அல்லது சொல் புத்தியாவது வேண்டும்

சகல வேதங்களிலும் என்ன உண்மை வெளிப்படை ஆக்கப்பட்டுள்ளது என சுயமாக ஆராய வேண்டும் அல்லது ஆராய்ந்த நல்லடியார்கள் பேசும்போது காதுகொடுத்தாவது கேட்க வேண்டும்

அப்போதுதான் சமரச சன்மார்க்கம் கொண்டுவர முடியும்

அவரவர்கள் அவரவரது கிணற்றில் நின்றுகொண்டுதான் பேசிக்கொண்டிருப்பார்கள் . இது இயல்புதானே

ஆனால் வள்ளல்பெருமானின் உள்ளக்கிடக்கை சகல மதங்களிலும் உள்ள இறைநெறியை உயர்த்தி குறைகளை களைந்து இறைவனோடு சமரசப்படுத்தும் செயலை செய்வதாகும்

இது அவ்வளவு எளிதாக மனிதர்களுக்கு புரியாது ; வரவும் வராது

யார் ஏற்கனவே இறைவனோடு தொடர்புள்ளவர்களோ அவர்களுக்கே புரியும்

நாராயணனது அம்சமான இயேசு கூறினார் :

8. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

9. சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.

பலர் இப்பிறவியில் வள்ளல்பெருமானிடத்து வந்த சேர்ந்த ஆத்மசாதகர்களாக இருப்பார்கள்

அதனால் குரு பெருமை பேசுவதை உயர்ந்த ஆன்மீகமாக கருதிக்கொள்கிறார்கள்

இறைவனிடத்து கொஞ்சமேனும் நேரடித்தொடர்பு உள்ளவர்களுக்கோ சமாதனம் எவ்வளவு உயிர்ப்புள்ள விஷயம் என்பது புரியும்

யாரிடம் தெய்வீக இயல்பு உள்ளதோ அவர்கள் எதனை கொடுத்தாவது சமாதானம் செய்கிறவர்களாக இருப்பார்கள்

வள்ளல்பெருமான் பூமிக்கு அனுப்பப்பட்டதன் நோக்கம் சண்டை போட்டுக்கொண்டு திரியும் சகல மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உண்டாக்குவதும் ஆகும்

அதற்கான நபர்களை சன்மார்க்கத்தில் கொண்டுவந்து சேர்ப்பதும் அவரது பல பிறவி சீடனான எனது பணியுமாகும்

பெருமான் கூறுகிறார் ; இறைவா உள்ளார்ந்த அன்போடு உனது திருவடியை சரண் அடைகிறவர்கள் உன்னை உணர்ந்தவர்கள் ஆவார்கள்

இறைவன் ஒருவர் இருக்கிறார் என பிரகிருதியை உணராமல் அது வெறும் இயற்கை என உளறித்திரியும் பலரும் சன்மார்க்கத்தில் வந்து சேர்வார்கள்

அவர்களுக்கு சமாதானத்தின் மேன்மை புரியாது

குற்றமே புரிவது மனித இயல்பு ; ஆனாலும் அவர்களை மன்னித்து ரட்சிப்பது உமது இயல்பாகும்

இறைவனின் தேவர்கள் எவருக்கும் இறைவனது குணம் இருக்கும்

இறைவனைப்போல ஆகும் மனிதர்களுக்கும் இறைவனைப்போல குணம் இருக்கும் என்றால் ஏற்றுக்கொள்ளும் மனிதர்கள் பரத்திலுள்ள தேவர்களுக்கும் இறைவனின் குணம் இருக்கும் என்றால் ஏற இறங்க பார்க்கிறார்கள்

அருட்பெருஞ்சோதியை தவிர யாரையும் மதிக்கலாகாது ; அவர்கள் வெறும் தத்துவம் என்றெல்லாம் உளறுகிறார்கள்

ஆனால் பெருமானார் அந்த வயதில் முருகனிடம் ஆன்மிகம் பழகிக்கொண்டிருந்த காலத்தில் முருகனுக்கும் அதே இயல்பு இருப்பதாக காண்கிறார்

பெற்றம் என்ற அறிய தமிழ் வார்த்தையை நந்திக்கு பெருமான் சூட்டியுள்ளார்

கரு சுமந்து பிரசவித்து பாலூட்டி வளர்ப்பவை பெற்றம்

பெற்றவை தன் பிள்ளைகளை முடிந்த அளவு பேணுவதிலேயே அக்கறையாக இருக்கும்

அவ்வளவு இரக்கம் உள்ளவை மேலே பயணிக்கிற சிவன் இன்னும் எவ்வளவு இரக்கம் உள்ளவராக இருப்பார்

பெற்றமேல் வரும்ஒரு பெருந்தகையின் அருள்உருப்
பெற்றெழுந் தோங்குசுடரே
பிரணவா காராரின் மயவிமல சொரூபமே
பேதமில் பரப்பிரமமே

முருகனை மிக ஆழமாக உணர்ந்தவர் பெருமான்

சிவனின் அருள் உருப்பெற்று உயர்ந்த சுடர் முருகன் என்கிறார்

உருவிலோ அவர் பிரணவம் எவரோ அந்த பரப்பிரம்மம் நாராயணனது விமல சொருபம் முருகன்

சிவ நாராயணனது சமரசம் முருகன்

பேதமில்லாத பரப்பிரம்மம்

அப்படியானால் பேதமுள்ள பிரம்மமும் இருக்கிறது தானே

சிவன் மட்டுமே நாராயணன் மட்டுமே அல்லாஹ் மட்டுமே அருட்பெருஞ்சோதி மட்டுமே என பேதம் பேசுவதே இந்த மாச்சரியம் என்ற தீய குணமாகும்

வள்ளல்பெருமானின் முதல் குருவாகிய முருகனோ சமரசத்தின் வடிவானவர்

மதமான பேய் மட்டுமல்ல மாச்சர்யம் பேசுகிற பிசாசும் சன்மார்க்கிகளை விட்டு ஓடட்டும் ; பின்பு முன்னணிப்படை யாக இருந்து உலகின் சகல பேதங்களையும் களைவோம்

சிவன் நாமத்தாலும் அருட்பெருஞ்சோதி
நாராயணன் நாமத்தாலும் அருட்பெருஞ்சோதி
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

வள்ளல் மலரடி வாழ்க
சமரச சன்மார்க்கம் ஓங்குக

No comments:

Post a Comment

முன்னுரை

சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் 9 வயதில் பிராட்வேயில் இலக்கணம் படிக்கும் படியாக பச்சயப்ப முதலியாரிடம் சேர்...