இதுவரை பார்த்தவர்கள்

Monday, 7 September 2020

முன்னுரை


சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் 9 வயதில் பிராட்வேயில் இலக்கணம் படிக்கும் படியாக பச்சயப்ப முதலியாரிடம் சேர்ப்பிக்க பட்டபோது வகுப்பில் நாட்டமில்லாது அடிக்கடி காணாமல் போகிறார் என்ற புகார் அண்ணன் சபாபதிக்கு செல்கிறது

ஒரு நாள் அண்ணன் ஒளிந்திருந்து கண்காணிக்கிறார் . மெதுவாக ராமலிங்கம் அங்கிருந்த கந்தர்கோட்டம் முருகன் கோவிலுக்குள் செல்கிறார்

அங்கு கருவறைக்கு அருகில் தூண் அருகில் அமர்ந்துகொண்டு முருகனை பார்ப்பதும் முணுமுணுப்பாதுமாக இருக்கிறார்

சில நிமிடங்கள் கழித்து அவரை பிடித்து அடிக்கிறார் அண்ணன் சபாபதி . இழுத்து கொண்டு சென்று முதலியாரிடம் ஒப்படைக்கிறார்

சிலநாள் கழித்து மீண்டும் பிள்ளை காணாமல் போகவும் இம்முறை பச்சயப்ப முதலியாரே கந்தர்கோட்டத்திற்குள் செல்கிறார்

அங்கு பூசாரி யாராவ்து பாடுங்களேன் என்று சொன்னதும் தன்னையறியாமல் பிள்ளை 30 கவிதைகள் பாடுகிறது . ஆசு கவி என்ற மிகவும் சிக்கலான இலக்கணத்தோடு மிக நேர்த்தியாக பாடப்பட்ட கவிதைகளை கேட்டு ஆசிரியர் திக்கித்து போகிறார் .


மனித முயற்சியால் இப்படி பாட முடியாது என உணர்ந்த ஆசிரியர் பிள்ளையிடம் தாள குணிந்து அப்பா உனக்கு இலக்கணம் கற்பிக்கும் அளவு தகுதி எனக்கில்லை என்கிறார்


இதே போலவே அண்ணனிடமும் தெரிவிக்க அவர்கள் முடிவு எடுக்க முடியாமல் தண்ணீர் தெளித்து விடுகிறார்கள்


எங்காவது போ என்னவாவது செய் என விடப்பட்டவர் பல நாளாளவும் காணாமல் போவதும் வருவதுமாக ஆகி விட்டது .


இதன் பின்னணி யாதென்றால் முருகனே தணிகைமணி பிரான் என்பவராக வள்ளலாருக்கு மட்டுமே தெரிகிற நபராக வந்து அவரை அழைத்து செல்வதும் பயிற்சி கொடுப்பதுமாக நடந்திருக்கிறது

கந்தர் கோட்ட மணிமாலை பாடல்களே அவரது முதல் பாடல் என பலர் சொன்ன போது திருத்தணி முருகன் முருகன் முன்பு பாடியபாடலே முதல் பாடல் என்றார் வள்ளலார்

திருத்தணிக்கு 9 வயதுக்கு முன்பு யாரும் அவரை அழைத்து செல்லாத போது ; இது எப்படி சாத்தியம் ?

தணிகைமணி பிரானே சூட்சுமமாக அவரை அழைத்து சென்றவர்

வள்ளல்பிரான் தணிகைமணிபிரானால் வழிநடத்தப்பட்டவர்

ஆவிமண்டல குருநாதர்களால் வழிநடத்தப்படுபவர்களால் மட்டுமே உலகத்திற்கு மேன்மைகளை
கொண்டு வர முடியும்

ஆகவேதான் ஞான நிலையில் நின்று கந்தர் கோட்ட மணிமாலையை வெளிக்கொணர முடிந்திருக்கிறது

Sunday, 3 May 2020

Kanthar Kotta Manimalai 1






9 வயது குழந்தையை பூசாரி ஏதாவது பாடு என சொன்னதால் பாட முயற்சிக்கிறது

அதுவோ உய்கின்ற நாள் எந்த நாள்

உய்கின்ற நாள் எந்த நாள் என புலம்புகிறது

வெறும் புலம்பல் மட்டும்தானா என்றால் தன் முற்பிறவியின் ஞான அனுபவத்தை பிழிந்து வழியும் சொல்கிறது

புண்ணியம் செய் நன்மை செய் என்கிறார்களே பாவதோசம் உள்ள மனிதன் நல்லது செய்ய நினைத்தாலும் கெடுதலாகவே முடியும்

ஒருவன் நன்மை செய்யவேண்டுமானால் அவனிடம் இறைவனின் பெரருள் நிறையவேண்டும்

டயருக்கு காற்று அடித்து அடித்து ஓட்டுவதுபோல அனுதினமும் இறைவனிடம் தோடர்பு கொண்டு இறையருளை ஏதாவது ஒரு வழியில் நாம் சேர்த்துக்கொண்டே இருக்கவேண்டும்

நித்திய அனுஸ்ட்டானம் இல்லாவிட்டால் உலகமும் அதன் இருளும் அசுரர்களும் நம்மை நிரப்பி மேற்கொள்வார்கள்

திரு ஓங்கினால் புண்ணிய செயல்கள் ஓங்கும்

அப்போது பக்தர்களின் திறன் ஓங்கும்

ஆனால் பக்தர்களின் நிலைமை என்ன

எப்போது பார்த்தாலும் ஏக்க பெருமூச்சுதானே

யாரையாவது கும்பிடுவதற்கு ரெடி நீதான் தண்டி என செம்படிக்க ரெடி

எனக்கு எல்லாம் செய்துகொடுங்கள்

மதத்தை பரப்ப ரெடி

ஆனால் உபதேசத்தை கற்றுக்கொள் உன்னை உயர்த்திக்கொள் என்றால் ஊகூம் ஊகூம்

மதச்சண்டை போட ரெடி

அடுத்தமத தேவர்களை காரிதுப்ப ரெடி

நாலுபேர்களின் மண்டையை உடைக்கவும் ரெடி

உன் தகுதியை இறைநிலைக்கு உயர்த்திக்கொள்

உன் மதகுருமார்களின் உபதேசங்களிலாவது தெளிந்து தேறு என்றால் ஊகூம் ஊகூம்

நாங்கள் கும்பிடுகிறோம் அவர் எங்களை பார்க்கட்டும் என்கிறார்கள்

யாரிடமும் உபதேசத்தை கற்றுக்கொண்டு அதன்வழி நடந்தால் அறிவு ஓங்கும்

பட்டறிவு செறிய செறிய ஞானசெல்வம் ஓங்கும்

உலகிலும் அருளிலும் நிறைவான இன்பம் ஓங்கும்

நித்திய பரமானந்தம்

களைகள் ஓங்கி சகதி மண்டிய குளத்தில்தான் செங்கமலம் மலரும்படியும் வனங்கள் ஓங்கி வளரும்படியும் இறைவன் அருள்செய்கிறார்

நாளும் நம்மை அரவணைத்து வளர்க்கிற கருணை நம் குற்றம் குறைகளை கண்டு வெறுப்பதில்லை

அவரோடு மயில் ஊர்வதுபோல இசைந்து வளர்ந்தால் வரம் கிடைக்கும்

அமுது கிடைக்கும்

ஞானம் வளர வளர நமது உணர்வில் இறையொளி வளரும்

ஆத்ம உள்ளொளி வளரும்

சிவன் வைரவனாக மாறிய வைரவன்பட்டியில் லிங்கத்தின் பெயர் வளர்ஒளி நாதர்

ஆத்ம உள்ளொளி வளர்ந்து வைரம் விளைவதே ஒளிதேகம்

அப்போது எவ்வுயிர் மீதும் தயவு கருணை உண்டாகி இறைவனின் பதம் அனுபூதி அருள் வளம் சித்திக்கும்

உய்கின்ற வழி

மதவைராக்கியத்தால் வருவதல்ல

மந்திர உச்சாடணத்தால் வருவதல்ல

ஆத்மாவில் இறையொளி ஓங்கட்டும்

உய்கின்ற நாள் அந்த நாள்
உய்கின்ற நாள் அந்த நாள்




Kanthar Kotta Manimalai 2






பரம் விண்ணுலகம் என்று ஏதேனும் இருக்கிறதா ?

சும்மா அதெல்லாம் கப்சா

இப்ப இருக்கும்போதே அனுபவிச்சு வாழாம எப்பயோ போகப்போற பரலோகத்துக்காக வாழனுமாம்

பாவபுண்ணியம் பார்க்கணுமாம்

செய்யிற செயலுக்கு விணை வந்து சேருமாம்

இன்னொரு பிறவியில வருமாம்

பிள்ளைகுட்டிகளுக்கு வருமாம்

நாம செய்யிறதா நாலுபேருக்கு தெரியாம செய்தா யாருக்கு தெரியும்

திறமையா இருக்கணும் தெரியுமா

போக்கத்த பயலுவ சும்மா சாமி பூதம்னு பேசிட்டு திரியுதுங்க

பெரியார் னு ஒரு சாமி நமக்கு சொல்லிரிச்சுள்ள ஆரிய பார்ப்பன சதின்னு

பகுத்தறிவுன்னு

நாலு காச பாப்பம்

ஜாலியா அனுபவிப்போம்

பக்தியாம் பக்தி

முக்தியாம் அருளாம்

விரதமாம் தவமாம் வரம் வாங்குவாங்களாம்

பசு பதி பாசம் னு சித்தாந்த விளக்கம் சொல்றாங்களாம்

பொழைக்கத்தெரியாத பசங்க பேசிட்டுத்திரியிதுங்க

மனசுக்கு பிடிக்கிற மாதிரி விதவிதமா சாப்பிடனும்

அதுவும் நாலுபேர் சேர்ந்து பெருமை பேசிகிட்டே விருந்து கொண்டாடனும்

நல்ல டிரெஸ் போட்டுக்கிடணும்

மனம் கவரும் பெண்கள் உடன் பேசிமகிழனும்

முடிஞ்சா நறுமண மலர்களை அவர்களுக்கு சூட்டி கொஞ்சனும்

கற்பு நெறி கடைபிடிக்காத பெண்களோடு கலந்து மகிழ்கின்ற சுகமே கண்கண்ட சுகம்

கைகண்ட பலன்

பூமியில் வாழ்ந்ததற்கு அர்த்தம்

என்ற கொள்கையுள்ள கயவர்களோடு சேர்ந்து வாழ வேண்டிய சூழ்நிலை வராமல் இறைவா பார்த்துக்கொள்ளுங்கள்

சேர்க்கை தோஷம் நம்மை பாதித்து விடும்

ஆகவேதான் சத்சங்கம் என்ற ஒரு தொடர்பை இருக்கிற இடத்திலே ஏதாவது ஒரு வகையில் வைத்துகொள்ள வேண்டும் என்று முன்னோர்கள் சொன்னார்கள்

உலகத்தில் கெட்டசங்கம் அரட்டை ஆங்காங்கே இல்லாமல் இருக்காது

அது எவ்வளவு இருந்தாலும் தினந்தோறும் ஒரு கோயிலில் போய் அமர்ந்து கொஞ்ச நேரம் தியானித்து பிரார்த்தித்தால் கெட்டதை நல்லது கழுவி விட்டு விடும்




Kanthar Kotta Manimalai 3






இது ஆசு கவி என்னும் சிக்கலான இலக்கண அமைப்பு

இருந்தாலும் பாட ஆரம்பித்து விட்டார் 9 வயது வள்ளலார்

இந்த பிறவியில் அவர் துறவி போல வாழப்போகிறவர்

ஆனாலும் முற்பிறவி அனுபவம் நிறைய இருக்கும் போல

சித்தினி என்கிற உடல்வாகு அமைப்புள்ள பெண்கள் துறுதுறுவென ரசனைக்கு உரியவர்கள்

ஒரு இடத்தில் கால் நிற்காது பாவிக்கொண்டே இருக்கும் . உடல் அசைவுகளும் அடவுகளும் முகபாவனைகளும் நாட்டிய கலைபோல சாதாரணமாகவே இருப்பார்கள்

எனக்கு திருமணமான புதிதில் என் மனைவி அழைச்சுகுட்டை என ஒருவரைப்பற்றி அவ்வப்போது கமண்டுவதை கேட்டிருக்கிறேன்

அப்புறம் ஒருநாள் அதுயார் என கேட்டபோது சொன்னார்கள்

அது சித்தினி உடல்வாகு அமைப்புள்ள ஒருபெண் என்பதையும் அவர்கள் அறியாமலேயே நாட்டியம் ஆடி அடுத்தவரை கவருவதால் என் மனைவி அழைச்சுகுட்டை என்கிற டெக்னிகல் வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார் என்பதை அறிந்தேன்

இன்றைய அம்மன் படங்கள் சிலைகள் பல இந்த சித்தினி உடல்வாகுவிலேயே இருக்கும்

வள்ளல்பெருமானும் மனிதர்களின் இதயத்தை கவரும் இந்த வடிவமைப்புள்ள பெண் ஒருவரையே இங்கு வர்ணிக்க ஆரம்பிக்கிறார்

ஒரு தேர்ந்த கவிஞன் கவிதை வடிக்கும்போது நேர்த்தி காட்டுவது அவன் கடமை என்பதால் வர்ணனையை கலைஞனின் கண் கொண்டு நாமும் பார்க்க வேண்டும்

சுறு சுறுப்பாக வெட்டி கொண்டிருக்கும் துடுப்பு போன்ற இடை
அன்னம் தத்தி தத்தி பூமியை பிடிப்பதுபோன்ரற நடை
மேகம் கூட்டம் ஒன்று மேல் ஒன்று கவிழ்ந்திருப்பதுபோலவும் விரிந்தும் படர்ந்தும் கோட்டை மதில் போன்ற கூந்தல்
கண்ணாமூச்சி ஆடும் மார்பு
செழுமையான இடுப்பு
நீர்ச்சுழி போன்ற உந்தி
வடிப்பான முழி
பெளர்ணமி போன்ற பளிச்சென்ற முகம்

ஆகியவற்றில் மயங்கி மங்கையர்களின் பிம்பத்தை சுமந்து
அங்கத்தை அளவெடுத்துக்கொண்டே இருக்குமாம் மனம் என்கிற பாவி
அது மாண்டால் மட்டுமே நான் வாழமுடியும்

மங்கையர்களின் பிம்பத்தை சுமந்து
அங்கத்தை அளவெடுத்துக்கொண்டே இருக்கும் மனம் என்கிற பாவி மாளட்டும் நான் வாழட்டும் என்கிறார் வள்ளலார்

பெண்கள் திரிபுரசுந்தரி ஆகிய அன்னையின் பல்வகை அம்சங்கள்

அவர்கள் அழகாக இருப்பது ஆர்களது இயல்பு

பிரச்சினை அவர்களின் அழகில் இல்லை

அந்த அழகியலை ஆண்களின் மனம் பிம்பமாக இதயத்தில் சுமந்து அதை அளவெடுத்துக்கொண்டே இருக்கிறதே அதில்தான் பிரச்சினை இருக்கிறது

பார்க்கிற பெண்களை எல்லாம் அவர்கள் கடந்துபோன பின்பும் இதயத்தில் சுமந்துகொண்டு திரிவதில்தான் பிரச்சினை இருக்கிறது

பெண்களை சுமக்காத மனம் ஆண்கள் அடைய வேண்டிய ஒரு முக்தி

ஒரு படி

பெண்ணாசையை கடந்த முக்தி நிலை இது

ஒழுங்கை கடைபிடி என்பது சரி என்றாலும் வம்பாக ஒழுங்கை கடைபிடிப்பது வளர்ச்சியே அல்ல

பெண்களால் பாதிக்கப்படாத நிலையை நீ அடையவேண்டும் என முருகன் வள்ளலாரிடம் சொன்னாராம்

பெண்களால் பாதிக்கப்படாத படிநிலையை அடையாது ஆசையை அடக்கு என்ற நிலையிலேயே நீ இருப்பதால் முன்னேற்றம் இல்லை என்பதை நீ உணராதிருப்பது என்ன என முருகன் வள்ளலாரிடம் கேட்டாராம்




Kanthar Kotta Manimalai 4






வள்ளல் பெருமான் சிவனால் திருவடி தீட்சை வழங்கப்பெற்ற பிறகு சிவ வழிபாட்டில் இருந்து அருட்பெருஞ்சோதி வழிபாட்டுக்கு மாறினார்

அந்த அருட்பெருஞ்சோதி இசுலாத்தில் சொல்லப்படும் அருவ இறைவன் என்பதும் அல்லா என்பதும் வள்ளலாருக்கு நன்கு தெரியும்

ஆனாலும் மதச்சாயம் உண்டாகி கேடுகள் விளையும் என்பதால் அருட்பெருஞ்சோதி என அடையாளப்படுத்தினார்

இசுலாத்தின் மந்திரமான கலிமாவை கொஞ்சம் மாற்றி சன்மார்க்க மந்திரமாக கொடுத்தார்

அவன் அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன் என்பது இசுலாத்தின் மந்திரம்

அளவற்ற அருளாளன் என்பதை அருட்பெருஞ்சோதி என்றார்
நிகரற்ற அன்புடையோன் என்பதை தனிப்பெருங்கருணை என்றார்

வள்ளலாரின் இன்னொரு அம்சமான சாலை ஆண்டவரும் பிரணவமே அருட்கலிமாவாகும் என உறுதிபடுத்தியுள்ளார்

அல்லா என்ற அரபு வார்த்தைக்கு அர்த்தம் கடவுள் இறைவன் என்ற பொது அர்த்தமாகும்

அருவ ஏக இறைவனை வழிபடுவது என்ற உண்மையைத்தவிர மற்ற அராபிய கலாச்சார பண்பாடுகளை இசுலாம் மதம் என்பதாக உள்ளது

அதில் அராபிய தன்மையை ஒதுக்கிவைத்துவிட்டு இந்துக்களாக இருந்துகொண்டே அருவ இறைவனை வணங்கலாம் என்பதை இந்திய இசுலாமியர் உணரவேண்டும்

அராபிய அடையாளங்கள் உங்களை அந்நியப்படுத்துகிறது

இந்திய உறவிணர்களைவிட்டு ஏன் ஒதுங்கவேண்டும்

இறைவன் முக்கியமே தவிர அராபிய அடையாளம் அவசியமற்றது

ஏக அருவ இறைவனை வணங்க சரியான மார்க்கம் வள்ளலாரின் சன்மார்க்கமாகும்

9 வயதில் கந்தர்கோட்ட முருகன் கோவிலில் வள்ளலார் நின்றுகொண்டிருக்கும் போது அலங்காரம் செய்யும்வரை யாராவது பாடுங்களேன் என பூசாரி கேட்டதால் 31 பாடல்கள் தன்னையறியாமல் பாடினார்

அருளால் பாடிய இப்பாடல்களில் முந்திய பிறவி ஞானம் உண்மை வெளிப்பட்டுள்ளது

அருவ ஏக இறைவனை வழிபடுவதன்றி அவரது தேவர்களை மட்டும் வழிபடு மதி என்றால் கனவில் கூட மதிக்கமாட்டேன்

அந்த தேவர்கள் ஏன் கண்ணெதிரே வந்து நன்மைகள் பல கொடுக்கிறேன் என்றாலும் அவர்களை மட்டும் மதித்து விட்டு உருவம் அற்ற இறைவனை வழிபடாமல் இரு என்றால் இருக்கமாட்டேன்




Kanthar Kotta Manimalai 5






ஞான சற்குரு முருகன் வள்ளலாருக்கு தெளிந்த உணர்வை கொடுத்தாராம் . என்ன தெளிவு ?

வள்ளல்பிரான் சைவமார்க்கத்தில் பிறந்து வளர்ந்தவர் . குடும்ப சூழலில் அந்த சித்தாந்தம் அவருக்கு தெரிந்திருக்கும் .

நல்ல குரு ஏற்கனவே வளர்ந்ததை அழித்து விடு ; மார்க்கம் மாறிவிடு ; இனம் மாறி வேறொரு இனத்தினரின் பெயரை வைத்துக்கொள் ; உன் தாத்தன் பூட்டன் பெயரை மறந்து விட்டு யாரென்றே தெரியாத ஆப்ரகாம் ஈசாக்கு யாக்கோபு இஸ்மாயில் என யூதர்களின் அரபியர்களின் பெயரை தாத்தன் பூட்டனாக சொல்லு என்றெல்லாம் சொல்லமாட்டார்

இருக்கிற இடத்திலிருந்தே கடவுளை நோக்கி பாதை காட்டி அருளுவார்

சைவமரபிலே பசு பதி பாசம் என்பதை சொல்லித்தந்திருப்பார்கள்

பசுவாகிய மனிதர்களை மனித ஆத்மாக்களை பாசம் என்னும் பிறவிக்கடலில் இருந்து ரட்சித்து கடவுளை காட்டியருளும் குருவாக சிவனை பதியாக பற்றிக்கொள்

உலக பாசத்திலிருந்து சிவகுருவின் மீது பாசத்தை வளர்த்துக்கொண்டால் பாசம் என்னும் பந்தத்திலிருந்து விடுபடுவாய் என்பார்கள்

வள்ளல்பிரானிடம் சிவகுருவாக வந்த முருகன் ; நிலைக்கண்ணாடியில் தன்னை காட்டியருளிய முருகன் பசு பதி பாசத்திலிருந்தே உபதேசத்தை தொடங்கினாராம்

பதிபூசை முதலநற் கிரியையால் மனம்எனும்
பசு சுத்த பாவனை ஆகும் கரணம் ஈங்கமாகும்

பதியாகிய சிவபூஜை செய்வதால் மனம் என்னும் பசு சுத்தமாகும் . மனதோடு சேர்ந்து இயங்கும் மனதை கெடுக்கும் ஐம்புலன்கள் ஈங்கமாகும் .

ஞானிகள் பேசுகிற பாஷையால் தமிழ் விளங்கும் . தங்கம் வலிவு இல்லாதது . நகையாக அணியமுடியாது . நகை செய்யவேண்டுமானால் அதில் செம்பை அளவோடு கலக்கவேண்டும் . அப்படி கலந்த தங்கத்தை தங்கநகை ஆபரணம் என்கிறோம் . ஆனால் ஆபரணத்தை ஈங்கம் என்கிறார் வள்ளலார்

தங்கம் செம்பு கலந்தால் ஈங்கம் . இந்த ஈங்கம் வலிமை பெற்று ஆபரணமாக மகிமை அடைகிறது . அதுபோல மனமது செம்மையாகும் போது சுத்த பாவனையும் உடலும் பொன்னைப்போல பிரகாசமடைகிறது . பொழிவடைகிறது

ஆனால் ஆனால் பதியானவரோ அந்த சுத்த பாவனையையும் கடந்தவர் .

மனிதன் முதலில் சுத்த பாவனை அடையவேண்டும் . பிறகோ அந்த பாவனையையும் கடந்து விடவேண்டும்

தீமையிலிருந்து நன்மைக்கு மாறவேண்டும் பிறகோ நன்மை தீமை என்பதையும் கடந்துவிடவேண்டும் இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன் . நன்மையையும் கூட ஒரு இருளே .

இறைதூதர்களோ அவதாரங்களோ தீய இயல்புள்ளவர்களை வெறுத்ததோ விலகி நின்றதோ இல்லை . அவர்களிலிருந்து தங்களை மேம்பட்டவர்களாக வித்தியாசப்படுத்தியும் காண்பித்ததில்லை

என்னை பாவிகளின் தோழன் என்கிறார்கள் ; மனம் திரும்ப அவசியமில்லாத 99 நீதிமான்களைக்காட்டிலும் மனம் திருந்துகிற ஒரே ஒரு பாவியின் நிமித்தம் பரலோகம் மிகுந்த சந்தோசமடையும் என்றார் சற்குரு இயேசு . தேவ அன்பை ருசி பார்த்தவர்கள் யாரும் தீயவர்களை அருவெறுக்க மாட்டார்கள்

இறைவன் நல்லோர்க்கும் பொல்லோர்க்கும் நடு நிற்பவர்

சுத்த பாவனை அறச்சுத்த பாவனையில் நிற்கும்மெய்ப்
பதி
சுத்தம் அந்த சுத்தத்தையும் கடந்த நிலை பரிகரித்த நிலை பரிசுத்தம்

நன்மை தீமை என உணர்ந்து நன்மையில் நின்றால் அது சுத்தம் நன்மை தீமையையும் கடந்து விட்டாலோ பரிசுத்தம் மதி பாசம் அற்று அடங்கிய நிலை

மதிபாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே
மலைவில்மெய்ஞ் ஞானமயமாய்
வரவுபோக் கற்றநிலை கூடும்என எனதுளே
வந்துணர்வு தந்தகுருவே

இருமையை கடந்த நிலை வரவு போக்கற்ற நிலை எதனாலும் பாதிப்பில்லாத நிலை கைகூடினால் மெய்ஞானம் விளங்கும்

அது குன்றின் மீது ஒளிரும் விளக்கை போல தனக்கும் சமூகத்திற்கும் பலனளிக்க கூடியது

மத்தேயு 5

1. அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.

2. அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்:

3. ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.

4. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.

5. சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.

6. நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.

7. இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

8. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

9. சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.


10. நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
14. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.

15. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
என்பது இயேசுவின் உபதேசமாகும்

முருகன் வள்ளலாருக்கு சைவ சித்தாந்தம் முதல் இயேசுவின் உபதேசம் வரை காட்டுக்கொடுத்தார் என்பதே இங்கு சுட்டப்படுகிறது

Kanthar Kotta Manimalai 6






பஞ்சமாபாதகம் என்று கேள்விப்பட்டிருப்போம் . ஆனால் வள்ளலோ ஏழு - சப்தபாதகம் என்கிறார் .

காமம், கோபம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ; இவைகளுடன் கொலை ஆகிய ஏழு பாதகங்கள் மற்றும் இவைகளோடு கூடிய அநேக தீய இயல்புகள் எனைப்பற்றிடாமல் சற்குரு முருகன் காத்துக்கொள்ளவேண்டுமாம் .

காமம் நமது உள் பகைவன் . கூடவே இருந்து அவ்வப்போது தலைகாட்டி கழுத்தை அறுப்பவன்

கோபமோ வெங்கொடியவன் . சட்டென்று கோபம் வந்து ஆட்டம் ஆடிவிடுவோம் . பிறகுபார்த்தால் நாம் கோபப்பட்டது தவறு என தெரியும்

பேராசை அளவுக்கதிகமாக அவதிப்படுவது - முழு மூடத்தனம்

இறைவன் போதிய அளவு கையைத்திறப்பார் . இல்லை எனது கொடுப்பார் . நம்மை இயலாமையில் இல்லாமையில் தவிக்க விடமாட்டார் என பலமுறை உணர்ந்தாலும் காசு விசயத்தில் கவலை சேர்த்துவைக்கவில்லையோ என நினைப்பது ; சுபசெலவு செய்ய தயங்குவது .

வீணான மோகம் . இனக்கவர்ச்சி என்பது ஒரு சாபம் . நம் ஆத்மா ஆணாகவோ இல்லை பெண்ணாகவோ இல்லை

சரீரத்திலோ நாம் ஆணாக இருந்தாலும் பெண்ணாகவும் மாறி மாறித்தான் பிறந்தும் வருகிறோம்

ஆண் பெண் பேதம் கடரப்படவேண்டியதே தவிர மறு பாலினத்தை எவ்வளவுதான் ரசித்தாலும் ருசித்தாலும் ஒன்றையும் அடையப்போவதில்லை . திருப்தி அடையப்போவதில்லை

மோகம் வீணானது

மதவெறி கண்கெட்ட ஆங்காரம்

உலகம் முழுவதும் உள்ள பலவகை இனங்களும் இறைவனால் படைக்கப்பட்டவையே

உலகம் முழுவதும் இன்று வளர்ந்துள்ள பலவகை இறைநெறிகளும் மனிதர்களை நல்வழிப்படுத்த இறைவனிடமிருந்து வந்தவையே என்ற பொதுப்பார்வை கண்கேட்டுப்போனதால் மதவெறி வருகிறது .

நம் மதத்தை வளர்க்கலாமே தவிர அடுத்த மதத்தை துவேசிக்க கூடாது. நம் மத தேவர்களை தலையில் தூக்கி வைத்து ஆடி அடுத்த மத தேவர்களை காறித்துப்பினால் நம் மத தேவர்களும் நம்மை விட்டு விலகிவிடுவார்கள்

ஏனெனில் தேவர்களுக்குள் பிரிவினை இல்லை

இறைவன் ஏகர் . இறை பேரரசில் உள்ள பலவகையான தேவர்களும் ஒருவர்க்கு ஒருவர் ஒற்றுமையாக ஏகமாகத்தான் உள்ளனர்

பரஸ்பர அன்பு , நல்லிணக்கம் தேவ குணங்களில் ஒன்று
வெறுப்பு பேதம் என்பது அசுர குணம்

ஏகத்தை ; நல்லிணக்கத்தை மறுக்கும் மாச்சர்யம் விழலுக்கு இறைக்கும் நீர் போன்றது

ஜீவகாருண்யம் ; இறக்கம் ; அன்பு என்பதை மிருகங்களை கொல்லாமல் இருப்பது ; சைவ உணவு மட்டும் சாப்பிடுவது என்பதாக மேலோட்டமாக கருதிக்கொள்கிறோம்

எந்த உணவு என்பது சடங்கு . அடையாளம் மட்டுமே

ஆனால் உள்ளார்ந்து இருக்கும் விஷயம் கொல்லாமை

விலங்குகளை கொல்லாமை புலால் உண்ணாமையை விட முக்கியத்துவமான விஷயம் மனிதர்களை கொல்லாமை

மனிதர்களை அவமதிப்பதே இறைவனுக்கு விரோதமான பெரும் பாவம்

மனிதன் ஒருவனே இறைவனின் சாயலில் உள்ளவன்

மனிதனை அவமதித்தால் அவனின் சாயலில் உள்ள இறைவனையும் அவமதிக்கிறோம்

தூய இறைபக்தி இறைவனின் சாயலில் உள்ள மனிதர்களை எக்காரணம் கொண்டும் அவமதிக்காது

மதங்களின் காரணமாக அடுத்த மதத்தினரை கொல்லலாம் ; சுவர்க்கம் கிடைக்கும் ; தர்மயுத்தம் என்பதெல்லாம் இறைவனை உணராத சீடர்கள் விளக்கம் கொடுத்தது

எந்த இறை தூதரும் ; ஞானியும் அடுத்த மதத்தினரை கொன்றால் புண்ணியம் என்று சொல்லவே இல்லை . அப்படிப்பட்டவர்களை வள்ளலால் பெருமான் பாதகன் என்கிறார்

வேறுவேறு தேசத்தில் வந்ததால் மதங்கள் வேற்றுமை உள்ளவையாக உள்ளன

ஆனால் மதங்களின் வேற்றுமைகளுக்கிடையில் ஒற்றுமையை உண்டாக்கும் சமரச வேதமும் சமரச வேதாந்தியும் இறைவன் புறத்திலிருந்து வந்த பிறகே கலியுகம் முடிவுக்கு கொண்டுவரப்படும்

சத்திய யுகமும் இறைபேரரசும் வரப்போவதை உணர்ந்த இறைபற்றாளர்கள் தங்கள் மதத்தை அழியவிடாமல் காப்பார்களே தவிர மற்ற மதங்களை வெறுக்கமாட்டார்கள்

சேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்
திறன்அருளி மலயமுனிவன்
சிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ
தேசிக சிகாரத்னமே

சேமத்தை அளிக்கும் மா மறைகள் பல உலகம் முழுதும் பகுதி பகுதியாக ஆங்காங்கு வெளியாக்கப்பட்டுள்ளன .வேற்றுமை போல தெரியும் அவை ஏமத்தை ஏக இறை நெறியை மறைமுகமாக . அவைகளின் ஊடாக போதிக்கின்றன . ஏகத்தின் அருட்பதமே ஓம் .

அந்தோ அந்த ஓம் ன் அர்த்தத்தை சிவன் முதலான அனைத்து தேவர்களும் மனிதர்களும் மறந்தல்லவோ போனார்கள் . மலை முனிவன் சிவனுக்கு முருகனல்லோ ஓம் என்ற பதத்தின் அர்த்தத்தை உபதேசித்தார்

இன்றைய மனிதர்களும் ஓம் என்பதன் அர்த்தம் அறியாமல் ஏதோதோ பிதற்றுவார் . அல்லது சிவனுக்கு முருகன் உபதேசித்து விட்டார் என்பதை தெரிந்திருப்பதையே ஓம் க்கு அர்த்தம் அறிந்ததுபோல நம்பிக்கொள்வார் .

ஓம் என்ற பதத்தின் அர்த்தம் ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் என்பதாம் ஓரிறைவனையே துதிக்கிறோம் என்பதாம்

வானமண்டலத்திலும் பால்வெளியிலும் அனைத்து தேவர்களும் படைப்புகளும் ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் ஓரிறைவனையே துதிக்கிறோம் என்று மனதாலும் உணர்வாலும் துதிக்கும் சத்தமே பிரணவ மந்திரமாக சுற்றி சுழன்று வருகிறது

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயண்யாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி



Kanthar Kotta Manimalai 7






உயர்ந்த பண்பாடு உள்ள மனைவி ; சற்குனமுள்ள பிள்ளைகள் : உதாரணமான நல்வழியில் ஈட்டிய பொருள் ; மாயைகளை போக்கும் அறிவாகிய உதவியாளர்கள் ; மலை அளவு ஆங்காரத்தையும் அமர்த்தி நல்வழிப்படுத்தும் நண்பர்கள் ; சுத்தமான காரியங்களில் ஏவும மனமும் ; எந்த கேவலமும் வராத சமூக மதிப்பும் பெற்று வாழ்கின்ற நல்வாழ்வை அருளுவாயாக

மனம் கொந்தளிக்காத தெளிவை அருளும் சிவஞான கடலே
அமுதமான வார்த்தைகளால் வரும் பேரானந்தமே
அல்லிமலரைப்போன்ற வாயும் அழகிய ஆபரணங்களை அணிந்த பொற்கொடியும் பசுங்கொடியும் போன்ற துணைவியார் இருவர் சூழ்ந்து வர அருள்பாலிக்கின்ற பொன்மலையே




Kanthar Kotta Manimalai 8






ஒருமை என்பது ஒரே என்ற அர்த்தம் உடையது அல்ல

ஒற்றுமை ; வேற்றுமையில் ஒற்றுமையாக அனைத்து மார்க்கங்களும் மதங்களும் அந்த ஒரே இறைவனை நோக்கியே பல பாதைகளில் முன்னேறிக்கொண்டுள்ளன என்ற புரிதல் உள்ள உத்தமர்கள் உறவு வேண்டும்

இதை பெருநெறி என்கிறார் வள்ளல்பெருமான்

காலம்காலமாக அருளாளர்கள் சமூகத்தை இறைவனை நோக்கியே நகர்த்தி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்

இன்றைக்கு நகர்த்தி விட வேண்டிய படியைப்பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருந்தாலும் இந்தப்படி நிரந்தரமானதல்ல என்ற தெளிவு அவர்களுக்கு இருந்தது

தாங்கள் பிறந்த மதத்தில் இருந்தார்கள் ; அடுத்த மதங்களை துவேசிக்காமல் இருந்தார்கள்

போட்டியாக உள்ள மதங்களின் உண்மைகளை கண்டறிந்து அவைகளை தங்கள் மதத்தில் கலந்து செழுமைப்படுத்தியவர்களே தங்கள் மதத்தை வளர்த்திருக்கிறார்கள்

அடுத்த மதங்களை துவேசித்தவர்களாலோ ; அடுத்த மதங்களை அழிக்க நினைத்தவர்களாலோ அவர்களின் மதம் வளர்ந்ததே இல்லை

மத துவேசிகளால் எந்த மதமும் வளர்ந்ததே இல்லை

அடுத்த மதத்தை அழிப்பதால் எந்த பலனும் விளையப்போவதில்லை

அடுத்த மதத்தின் உண்மையை நாம் உறிஞ்சிக்கொண்டால் ; அது நமக்கு தீங்கு செய்ய சக்தி அற்றுப்போய் விடும்

சைவமும் வைணவமும் சமணர்களுடன் போட்டியிட முடியாமல் தோற்றுப்போன காலம் ஒன்று இந்தியாவில் இருந்தது

அரசுகள் அனைத்தும் சமண மதத்தின் ஆழுகையில் இருந்தன

அதில் முதன்முதலாக சைவத்திற்கு புத்தியிர்ப்பை உண்டாக்கியவர் திருநாவுக்கரசர்

அவர் நோய்வாய்ப்பட்டிருந்த வரகுணபாண்டிய மன்னனை குணப்படுத்தியவுடன் சைவ சமயம் அரச மதமாக அறிவிக்கப்படவில்லை

வழக்கம் போல வாதிலே சமணர்களை வெல்லவேண்டி வந்தது

அது தத்துவ வாதாக மட்டுமில்லை ; அக்கால வழக்கப்படி வைகையில் ஏடு விடவேண்டும்

அந்த ஏடு வைகையை எதிர்த்து நீந்த வேண்டும்

திருநாவுக்கரசர் விட்ட ஏடு எதிர்த்திசையில் நீந்தி கரையேறிய இடம் திருவேடகம் . இன்று அங்கு ராமகிருஷ்ண தபோவனம் இருக்கிறது

நான் முக்கியமாக சொல்ல வருவது ; அதற்கு முன்பும் பல சைவர்கள் சைவத்தின் மீதுள்ள அக்கறையால் போட்டி இட்டார்கள் . தோற்றார்கள் ; கழுவேற்றப்பட்டார்கள்

சமணர்களை வெல்ல முடியாத போட்டிகள் பல நடந்தன

இதில் திருநாவுக்கரசர் மட்டும் எப்படி வென்றார் ?

ஒரே ஒரு பதில் ; அதற்கு முன்பு சமணத்துறவியாக தர்மசேனர் என்ற பெயரில் சமண பள்ளிகளில் பல பயிற்சிகள் கற்றவர் திருநாவுக்கரசர் .

சமண மதத்தின் சகல ரகசியங்களையும் கற்றுத்தேறி சைவத்திற்கு மாறிவந்த திருநாவுக்கரசர் சமணத்தை வென்றதன் பின்னணி அதன் உண்மைகள் திருநாவுக்கரசருக்கு அத்துப்படி என்பதாகும்

அப்படியில்லாமல் இன்றைய விருட்டாங்குஞ்சுகளை போல வெறும் வேகம் மட்டும் வைத்துக்கொண்டு சமணத்தை வெறுத்து அழிக்க நினைத்தவர்கள் சமணத்தோடு தோற்று அழிந்துபோனார்கள்

சமணத்தை கரைத்துக்குடித்த திருநாவுக்கரசர் சமணத்தை வென்று சைவத்திற்கு புத்துயிர் கொடுத்தார்

இதுவே இந்து மதம் வளர்ந்து வந்த பாதை

இன்றைய மதரட்சகர்களால் இந்து மதம் ஒரு தம்பிடி கூட வளராது

வள்ளல்பிரான் எதற்காக பூமிக்கு அனுப்பபட்டாரோ ; அது உலகம் முழுவதும் சகல மதங்களையும் சமரசப்படுத்தி சமாதானத்தை நிலைநாட்டும் பணி வள்ளலாரின் சீடர்களுக்கு இருக்கிறது

அந்தப்பெரு நெறி ; சகல மதங்களையும் ஒதுக்கிவிட்டு புது மதத்தை உறபத்தி செய்வதல்ல

சகல மதங்களின் மூலமாக வெளிப்பட்டுள்ள உண்மைகளை உள்ளபடி அங்கீகரித்து பொதுநோக்கு சமரச சமாதானத்தை உறபத்தி செய்வதாகும்

வள்ளலாரின் பின்வரப்போகிறவர் சமரச வேதாந்தி என்பதை அறிக

அவரை வரவேற்று பிரார்த்தனை செய்வது வள்ளலாரின் இதயத்தை உணர்ந்தோரின் பணியாகும்



Kanthar Kotta Manimalai 9





தேவைகள் உலக வாழ்வுக்கான தேவைகள் மிக குறைந்த பட்ச தேவைகள் நிறைவேறப்படாமல் இப்பூமியில் வாழமுடியாது

உணவு உடை இருப்பிடம் இம்மூன்றாவது பூர்த்தியானால் மட்டுமே மனிதன் ஆன்ம வாழ்வில் பயணித்து சாதனைகள் செய்யமுடியும்

வள்ளலாரை படிப்பித்து ஆளாக்கும்படியாக அவரது பெற்றோர்கள் அண்ணன் சபாபதியிடம் சென்னைக்கு அனுப்ப அவரை ப்ராட்வேயில் வாழ்ந்த பச்சையப்ப முதலியாரிடம் தமிழ் இலக்கணம் கற்கச் சேர்க்கப் பட்டார்.அப்போது அவருக்கு ஒன்பது வயது. இடைவெளியில் அடிக்கடி அவர் காணாமல் போவிடுவார்.நண்பர்கள் அவரைத் தேடிக் கொணர்வது வழக்கம். இந்தச் செயல்பற்றி அவரது அண்ணன் சபாபதிக்குச் செய்தி சொல்லப்பட்டது. ஒரு நாள் அண்ணன் மறைவில் இருந்து தம்பியைக் கண்காணித்தார்.

இடைவெளியில் இராமலிங்கம் விடுவிடு என பூங்கா பகுதியில் உள்ள கந்தர் கோட்டத்துக்குள் செல்கிறார். முன்னூறு வருடங்கள் பழமைமிக்க முருகன் ஸ்தலம் கந்தர் கோட்டம்! கோயிலுக்குள் சென்று நேரே முருகன் முன் தூண் ஓரம் நிற்பதும், வாயால் ஏதோ முனுமுனுப்பதுமாக இருக்கிறார், பின் வந்து விடுகிறார்.அன்று மாலை இராமலிங்கத்துக்கு அடியோ அடி!

மறுநாளும் இதே போல் கந்தர்கோட்டம் போய் விட்டார், இப்போது பச்சையப்ப முதலியாரே அவர் பின் சென்று கவனிக்க, யாரோ அபிஷேகக் கட்டளைக்கு தந்திருக்கும் வேளையில், அர்ச்சகர் ”யாராவது பாடுங்களேன்” என்று மூலஸ்தானத்தில் இருந்து ஒரல் எழுப்ப, ஒன்பது வயது இராமலிங்கம் அப்போது ஆசுகவியாய் தமிழ்த்தெய்வத்தின் கருணையால் வாய்மலர்ந்தது தான் கந்தர்கோட்ட தெய்வமணி மாலையின் முதல் மணி . திருவோங்கு எனத்தொடங்கும் பாடல் .

ஆசுகவி என்பது மிக சிக்கலான இலக்கண அமைப்பு கொண்டது . கற்றறிந்த பண்டிதர்களுக்கே உரிய நேர்த்தியோடு அக்கவி வெளிப்படவும் பச்சையப்ப முதலியார் கற்பிப்பதற்கு அப்பாற்பட்ட தெய்வப்பேறு உள்ள குழந்தை இது என்பதை புரிந்துகொண்டார் . சபாபதியிடம் இதை புரியவைக்க முயற்சித்தார் . இந்த குழந்தைக்கு கல்வி கற்பிக்கும் தகுதி தனக்கில்லை என கூறிவிட்டார்

இதன் தாத்பர்யம் என்னவென்று புரியாமல் தன் கை மீறிய தம்பியை பற்றி கவலைப்படுவதால் பலனில்லை என்பதாக ஒரு முடிவெடுத்து எக்கேடும் கேட்டுப்போ என்கிற அளவில் வள்ளலாரை கண்டு கொள்ளாமல் இருக்கத்தொடங்கி விட்டார் சபாபதி

பள்ளியும் போகாமல் காலையில் வெளியே போவதும் இரவு வந்து தூங்க வருவதுமான வள்ளலார் எப்போது வருவார் என தெரியாமல் அவரை உண்பிப்பதுபற்றியும் கடந்த நிலை உருவாகிவிட்டது

மின்ட் என சொல்லப்படும் தங்கசாலை பகுதியில் வள்ளலார் அண்ணன் வாழ்ந்த ஒதுக்குப்புறமான அந்த வீட்டுக்கு சென்றிருக்கிறேன்

நல்லவேளையாக அவ்வீடு நான்கு பேர் கைமாறி இப்போது ஆன்மீக உணர்வுள்ள ஒருவரின் கைக்கு வந்ததால் அந்த மாடி போர்ஷனை அப்படியே ஒரு கோவில் போல மாற்றி வைத்திருக்கிறார்கள்

அந்த இல்லம் ஒரு திண்ணைக்கு அடுத்து வாசலும் அதனுள் இரண்டு மூன்று ஒட்டு குடித்தனமும் உள் படியில் ஏறிப்போனால் மாடியில் சிறு வீடும் உள்ளது

இரவு நேரமானதும் வாசலை மூடி படுத்து விடுவார்கள் . பிந்திய இரவு வரும் வள்ளலார் திண்ணையில் படுத்து விடுவார் .

சாப்பாடு வேண்டும் என்று யாரிடம் கேட்க முடியும் பசி தர்ம சங்கடமான நிலைமை வள்ளலார் அனுபவித்ததுதான்

இதற்கு முன்பே நிலைக்கண்ணாடியில் தலை வார போனால் தனக்கு பதிலாக முருகனின் அருட்காட்சி காண ஆரம்பித்து அந்த சற்குருவே அவரை ரகசியமாக நடத்திக்கொண்டிருந்தார் என்பது யாரும் அறியாதது

உலகறிய வள்ளலார் பாடிய முதல் பாடல் திருவோங்கு என்ற தெய்வமணிமாலை பாடல் என்றால் வள்ளலார் முதல்முதல் பாடியது திருத்தணி முருகனைக்கண்டு பாடியது என அவரே பின்னாளில் தெரிவித்துள்ளார் . அப்படியானால் அந்த சிறுவனை யார் திருத்தணி அழைத்து சென்றது என்றால் சாட்சாத சற்குரு முருகனே அவரை அழைத்து சென்று கொண்டிருந்தார்

அவர் வீட்டுக்கு நள்ளிரவு வந்தாலும் வாயில் கதவை திறந்து அண்ணியின் ரூபத்தில் ஒற்றியூர் வடிவாம்பிகையே வந்து உணவளிப்பார்

சற்குருநாதர்கள் நால்வரில் ஒருவர் தரிசனம் கிடைத்துவிட்டால்போதும் மற்றவர்களும் அழைக்காமலேயே உதவிக்கு வருவார்கள் அவர்களுக்குள் எந்த பிரிவினையும் உயர்வு தாழ்வும் கிடையாது

ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத
இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ
திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்
இடுகின்ற திறமும்இறையாம்
நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள்
நினைவிடா நெறியும்அயலார்
நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று
நெகிழாத திடமும் தந்து

அதிதேவர் யாராவது ஒருவரின் தரிசனம் கிடைக்கப்பெற்றால் மட்டுமே ஈ என்று இறக்காத நிலைமை உண்டாகும்

ஆனால் ஈ ஈ என்று கோவில் குளம் என்று எங்கும் ஏங்கி அலையும் சாதாரண மனிதர்களை காணும் போது வள்ளலாரின் மனம் பதைக்கிறது அவர்களுக்கு இல்லை என சொல்லாமல் ஈயும் திறம் வேண்டும் என ஏங்குகிறார்

அந்த ஏக்கம் உறு பசி தீர்த்தால் அந்த மனிதனை இறைவனை நோக்கி திறுப்பமுடியுமே என்ற ஏக்கமே அவரால் அணையாத அடுப்பு ஒன்றை வடலூரில் ஏற்ற முடிந்தது

அடுத்து மிகமிக முக்கியமான உபதேசம் எதற்காகவும் யாரையும் குறை சொல்லாதே திட்டாதே வெறுக்காதே என்ற அஹிம்சை கொள்கை . ஒரு தவறுக்கு மனிதன் மட்டும் பொறுப்பே இல்லை ; பின்னணியில் அசுர ஆவிகள் மனிதனின் சிந்தனையை கெடுக்கின்றன என்பதால் அவனை சகித்து அவன் திருந்தும்படியாக பிரார்த்தனை செய்து அவனை திருத்தவேண்டும் , கோபம் கொள்ளலாகாது

சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத்
தீங்குசொல் லாததெளிவும்
திறம்ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
திருவடிக் காளாக்குவாய்
ஆம் இறைவனும் அவரது அடுத்த வெளிப்பாடுகளான நான்கு அதிதேவர்களுமே அவர்களது திருவடிக்கு நம்மை ஆளாக்கி திறமும் வாய்மையும் தூய்மையும் தரமுடியும்

நாராயணன் நாமத்தினாலும் ஆதிசேஷனின் நாமத்தினாலும் நாராயணியின் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது பேரருளால் நிரப்ப வேண்டுகிறேன்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி



Kanthar Kotta Manimalai 10







காக்கைகள் அந்தி அடங்குகிற நேரம் ஒரு பெரிய மரத்தில் கூடி பழமை பேசும் .கரைந்துகொண்டே இருக்கும் . ஒரு காக்கை கரைவதற்கு பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு கூட்டமாக கரைந்துகொண்டே இருக்கும் அதில் ஒரு உப்பும் சப்பும் இல்லை என்பதை வள்ளல்பெருமான் அறிந்திருக்கிறார் .

அதுபோல உப்பும் சப்புமில்லாமல் ஓயாமல் வெட்டி பெருமை புராணம் பாடுவது மனிதர்களின் இயல்புமாகும்

இப்படி வெட்டியாக பேசுவது சாதாரண மனிதர்களை விட கள்ளுண்டவர்களுக்கு மிக மிக அதிகம் ,

சாராயத்தை குடித்து விட்டு கங்குகணக்கில்லாமல் உளறுவதும் ஊத்தை காதம் நாறுவதும் வாய்வலிக்கும் வரை தர்க்கம் செய்வதும் செய்வார்கள் ; சிவனைப்பற்றி தேவர்களைப்பற்றி இறைவனைப்பற்றி பேசினால் வாயை மூடு தொனதொனதென்னாதே என்பார்களாம் ;

ஆனாலும் இப்படிப்பட்ட மனிதர்களாக இருந்தாலும் உனது புகழ் நான் பேசுவதை காதுகொடுத்து கேட்டு உன்னையும் துதிக்கும் மனது சிலருக்கு இருக்குமே அப்படிப்பட்டவர்களின் உறவு எனக்கு அமையட்டும்

இறை அடியவர்கள் ஒருபோதும் தரம் தாழ்ந்தவர்களை ஒதுக்கவே மாட்டார்கள் ; ஏனென்றால் சற்குருநாதன் முருகன் எப்படிப்பட்டவன் என்பது அவர்களுக்கு முன் உதாரணம் .

உயர்ந்த பண்புள்ள தெய்வானையோடு மட்டுமல்ல மிக தாழ்ந்த மடக்குறத்தி வள்ளியொடும் உள்ளார்ந்து இசைவாக சந்தோசமாக வாழும் குணக்குன்று அவனல்லவா ?





Kanthar Kotta Manimalai 11






கடவுளை நீ உனக்குள்ளேயே தேடி கண்டறியவேண்டும் . நானே கடவுள் என்பதை சொல்லப்பழகிக்கொள்வது அவ்வளவு சாதாரண விசயமல்ல எங்கே நானே கடவுள் என சாதாரண மக்களை சொல்லச்சொல்லுங்கள் பார்க்கலாம் ; அவர்களுக்கு தைரியம் வராது

நம்மை நாம் அறிந்துகொண்டால் மட்டுமே கடவுளை நீ உணர முடியும் என சித்தர் பெருமக்கள் காட்டிய உயர்ந்த ஞானத்தை என்னிடம் வந்து சிரத்தையுடன் கற்றுக்கொண்டதால் நீயும் ஞானியாகி விட்டாய்

அதனால் நான் கடவுள் நான் கடவுள் என சொல்லும் தைரியம் உனக்கு வந்திருக்கிறது . இந்தா பிடி சட்டிபிகேட் நீ ஞானியாகி விட்டாய் இப்பிறவிக்கு பிறகு நன்மையையும் இல்லை தீமையும் இல்லை

இருக்கிறவரைக்கும் மகிழ்ச்சியாக இரு . சந்தோசம் சந்தோசம்

அப்படி இருக்க கற்றுக்கொள்வது உன் ஞானத்தில் உள்ளது

எந்த கட்டுப்பாடுகளையும் வைத்துக்கொள்ளாதே

இயற்கையோடு இயற்கையாக பிரம்மத்தோடு பிரம்மமாக இருக்க கற்றுக்கொள் என உசுப்பேத்திய ரஜினீஸ் முதல் இன்றைய பல கார்பரேட் குருமார்களின் வியாபாரம் படித்த நல்ல வேலையிலிருக்கும் இளைஞர்களுக்கு உற்சாகத்தை தருகிறது

சிலர் அதை வரைமுறையற்ற இன்ப நுகர்ச்சிக்கான கதவாக ஆக்கிக்கொண்டார்கள்

இன்னும் சிலர் எதையும் அனுபவி ஆனால் பிறருக்கு தீங்கு இல்லாமல் அளவோடு அனுபவிக்க கற்றுக்கொள்வது நுட்பம்

அறிவை பட்டை தீட்டி உலகிற்கு கேடில்லாமல் மனதை ஒழுங்குபடுத்தி உன் உலக வாழ்வில் முன்னேறலாம் ; குடும்பத்தை முன்னேற்றலாம்

வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் என சொல்லிக்கொண்டே திறமையாக வியாபாரம் செய்து முன்னேறலாம் என சொன்னவுடன் கொள்ளை லாபம் அடிக்கும் வியாபாரிகளுக்கு ரெம்ப சவுகரியமாக ஆகி விட்டது

உனக்கும் உலகிற்கும் தீமையில்லாமல் அகத்தாய்வு மனதை ஒழுங்கு செய்து திறம்பட வாழும் இந்த வாழ்வே போதும்

இந்த உபதேசம் எந்த அடிப்படையிலானது என்றால் இனி இந்த பிறவிக்கு பிறகு நாம் இல்லை ; பிரம்மத்தில் நல்ல பதிவுகளையும் கெட்ட பதிவுகளையும் கலந்து விட்டு இல்லாமல் போய் விடுவோம் ; அதற்காக ஆட்டம் போடு அக்கிரம் செய் சமுதாயத்தை கெடு என சொல்லவில்லை ; நன்மையாக வாழ பழகு

வீணாக போகும் பிரம்மத்தின் நீதி இது

இல்லாமல் போகும் பிரம்மத்தின் நீதி இது

அதாவது அழிவை விரும்பும் பிரம்மத்தின் நீதி இது

பிரம்மம் பிரம்மம் என அந்த அழிவை விரும்பும் பிரம்மத்தின் (அசுரர்களின்) உபதேசத்தை கேட்டு பிரம்மையாகவே போதித்து சாதிப்பர்களாம்

இது புண்மை நெறி என்கிறார் வள்ளல்பெருமான்

வேதாத்திரியம் என்கிறார்களே அது திரிக்கும் நெறி . மேற்போக்காக ஆன்மிகம் போல தெரிந்தாலும் முடிவு என்னவோ நித்தியஜீவனை மறுப்பது . மரணமில்லா பெருவாழ்வு என்ற இலக்கை அறிந்துகொள்ளவிடாமல் அவர்களை சூனியத்தை நோக்கி திருப்பிவிட்ட அசுர உபதேசமாகும் .

வேதாத்திரி ஆரம்பத்தில் ஒரே ஒரு பொய்யை பரப்பினார்

வள்ளலார் ஒரு பவுர்ணமி இரவில் வேதாத்திரியின் கால் பக்கம் வந்து நின்றதாகவும் இனிமேல் உன் மூலமாக நன்றாக கல்லா கட்டுவேன் என சொன்னதாகவும் ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டார்

சன்மார்க்கத்தை சேர்ந்த பல அன்பர்கள் கூட்டம் கூட்டமாக அவர் பின்னால் அணிவகுத்து வேதாத்திரியத்தை வளர்த்துவிட்டார்கள்

உன்னதமான ஏக இறைவனின் பேரிலான பக்தி சரணாகதி ; ஆத்தும சரீரத்தை ஒளி சரீரமாக வளர்த்து ஸ்துல சரீரத்தின் அவசியம் இல்லாமல் நித்தியஜீவனை அடைந்து என்றென்றும் உயிர் வாழும் சகாக்கல்வியை போதித்தவரான வள்ளல்பெருமான் எங்கே இனிமேல் இல்லாமல் கரைந்து மறைந்துவிடுவோம் என்று சொன்ன வேதாத்திரி எங்கே

இருவரும் நேர் எதிர்புறமல்லவா ?

வேதாத்திரி சொன்னார் . சாதாரண பொதுமக்கள் இல்லாமல் போய் விடுவார்கள்

ஆனால் யோகக்கலையை கற்றுக்கொண்டு குண்டலினியை ஏற்றியவர்கள் ஜீவசமாதி அடைந்து சாகாமல் இருப்பதுதான் சாகாக்கல்வி

ஜீவசமாதியை வள்ளல்பெருமான் ஆதரித்தது இல்லை

அழிகிற உடலை அழிய விடாமல் காக்கிரதல்ல மரணமில்லா பெருவாழ்வு

ஆத்தும சரீரத்தை ஒளி சரீரமாக மாற்றிக்கொள்வது . தேவராக மாறி பரலோகத்திற்குள் பிரவேசிப்பது மனிதனாக பிறந்ததின் இலக்கு

ஆதியோகிய சிவன் வளர் ஒளி நாதராக தனது ஆத்துமாவில் ஒளியை பெருக்கி முழுமை அடைந்ததை வைரவன் என்றார்கள்

மனித படைப்பு எதற்காக என்றால் நாம் தேவராக மாறி பரலோகத்திற்குள் நுழைய வேண்டும்

அருட்பெருஞ்சோதி இறைவன் ஆதியில் படைத்த 33 கோடி தேவர்களில் ஒரு பெரிய கூட்டம் இறைவனுக்கு விரோதமாக தன் முனைப்பு ஆணவம் அடைந்து அசுரர்களாக மாறிவிட்டனர்

அந்த வெற்றிடத்தை மனிதர்களாக இருந்து ஒளி சரீரம் பெறுவோரின் எண்ணிக்கை நிரப்ப வேண்டும் என்பதற்காகவே பூமியில் மனித படைப்பு அனுமதிக்கப்படுகிறது

அது நிரம்பினால் பூமியில் மனித படைப்பு நிறுத்தப்படும்

இறைவனே பெரியவன் என முன்னிலைப்படுத்துபவர்கள் தேவர்கள்

நாங்களும் இறைநிலையை அடைந்துவிட்டோம் என தங்களைத்தாங்களே பெருமைப்படுத்துபவர்கள் அசுரர்கள்

ஆன்மீகவாதிகளில் இந்த இரண்டு பிரிவுகளும் உள்ளனர்

ஆன்மிகம் என்றவுடன் ஆகா என ஓடி விழுந்துவிட கூடாது

எவ்வளவோ சித்துக்கள் ஆற்றல் இருந்தாலும் ; திரள் திரளாக வந்த மக்களுக்கு நன்மைகள் நடந்தாலும் அதை விளம்பரம் போட்டு காட்டாமல் அருட்பெருஞ்சோதி வழிபாட்டை முன்னிலைப்படுத்தியவர் வள்ளல்பெருமான்

தற்பெருமை பிடித்த மனிதர்களுக்கும் இறைவனை மகிமைப்படுத்து ; அவரை சராணகதி அடைக என்றால் பிடிக்காது

நீயும் கடவுளாகலாம் என்றால் சபாஷ் என்பார்கள்

அந்த மனிதன் கடவுளாகிவிட்டான் ; சித்தராகிவிட்டான் ; ஜீவசமாதி ஆகி அருள்பாலிக்கிறான் என்றால் ஓடி ஓடி விழுந்து கும்பிட்டுக்கொள்வான்
ஆனால் கடவுளை கும்பிடு என்றால் ஒரு பார்வை பார்ப்பான்

நீ அறிந்த ரூபம் ; பெயர் எல்லாவற்றையும் விட உன்னதமானவர் கடவுள் அருட்பெருஞ்ஜோதி

சிவனை நீ நேசிக்கிறாயா

அவரை குருவாக வைத்துக்கொள்

இங்கு முருகனை பாடுமிடத்து வள்ளல்பெருமானின் வார்ணனையை பாருங்கள்

பரிபபூரன அகன்ட சத்துவமான பிரம்மத்தின் உப சாந்தன் முருகன்

சிவனின் சின்ன வடிவம் முருகன்

பிரம்மத்தின் உபசாந்தன் முருகன் என்றால் நம்மைப்போன்ற மனிதர்களின் நிலை என்ன ?

முருகனே உபசாந்தன் என்றால் சாகிற பிரம்மமாகிய மனிதர்கள் நம்மை பிரம்மம் என்று சொல்லலாமா ?


Kanthar Kotta Manimalai 12






நெட்டிலை என்பதை நெட்டிலிங்க மரம் எனவும் கருதலாம்

மரம் கூராக இருக்கும் சடைசடையாக பக்கவாட்டு சிம்புகளும் இலைகளும் அடர்த்தியாக இருக்கும்

ஞானம் முழுஞானம் என்பது ஆழமானது மட்டுமல்ல அகலமாகவும் பல்முகத்தன்மை உடையதாகும்

பக்கவாட்டில் சிம்புகள் இருக்கலாமே தவிர பக்கவாட்டில் வளராமல இறைவனை நோக்கி உச்சியை நோக்கியே வளரவேண்டும்

நெட்டிலிங்க மரத்தில் நுனி உண்ணதத்தை நோக்கி இருக்க அதற்கு ஒர்மையாக பல நூறு விழுதுகள் இருக்கும்

அதைப்போலவே பூமியில் உள்ள எந்த சமயங்களும் குருமார்க்கங்களும் இறைவனை நோக்கியவையே

அடியில் உள்ள விழுதில் ஒரு மார்க்கத்தில் உள்ள மனிதனுக்கு தனக்கு மேலே
உள்ள விழுதில் உள்ள மனிதர்கள் அதே மரத்தில் தங்கியுள்ளவர்கள் என்பது
புரியாது

படிப்படியாக மேலேறி உச்சியை நெருங்கியவற்கு தங்களுக்கு கீழே நாலா புறத்திலிருந்தும் ஏறி வருகிறவர்களை தெரியும்

அவர்கள் நின்று கொண்டு தவிக்கிற இடறல்களும் புரியும்

கீழ்த்தட்டில் உள்ளவர்களுக்கு மேலே இருப்பவர்களும் புரியாது பக்கவாட்டில் உள்ளவர்களையும் தெரியாது

இறைவனை நோக்கிய இந்த மரம் ஏணி

சகல மார்க்கங்களையும் உள்ளடக்கிய குருத்துவங்கள் சற்குருத்துவம்

சற்குரு

பல குருமார்களின் அதிபர் தலைவர்

சகல என்பதே சற் என்பதாகும்

ஆவிமண்டலத்தில் சற்குரு சகல ஞானத்திற்கும் அதிபதி ஆதிசேசனாகும்

அந்த ஆதிசேசன் காரியப்படும்போது செங்கோடன் கார்க்கோடன் என இரண்டு வியாபகம்

செங்கோடன் ஞானசற்குருவாம் முருகன்

அருளுலக வாழ்வுக்கு சற்குரு

கார்க்கோடன் உலக வாழ்வுக்கு சற்குரு

விநாயகர்

ரெண்டு குட்டு குட்டி அப்பம் பொறி ஆட்டபாட்டம்

உலக வாழ்விற்கான உத்வேகம்

பரப்பிரமம் என்றவுடன் ஒன்று ஒரு நபர் என்பதைப்போல ஒரு படிமம் பலரை ஏமாற்றுகிறது

ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து

பல தேவர்களாக விரிந்து காரியப்பட்டுக்கொண்டுள்ளது

33 கோடி தேவர்களை அடக்கிய பரமண்டலம்

33 அதிதேவர்கள்

இறைபேரரசில் அவரவர் வேலையை கணகச்சிதமாக செய்து இயங்கிக்கொண்டுள்ளது

இந்த அனைத்திற்கும் தலைவரான ஒரே நபர் போன்றவர் இறைவன் அருட்பெருஞ்ஜோதி

அல் என அரபு பாஸையிலும் எல் என யூதபாஸையிலும் அழைக்கப்படுபவர் தமிழில் இறைவன் என்ற பொதுவார்த்தையாகும்

நாம் உருவமாக வடிவமாக அறிந்தவர்கள் அனைவரும் தேவர்கள்

இந்த அல் அல்லது பிரம்மம் என சொல்லப்படும் படைப்புக்கும் வெளியே வெட்டவெளியாகவும் நிற்பவர்

பிரபஞ்சத்தையும் விட பெரியவர்

அனைத்தையும் நீங்கி நிற்பாய் என்கிறது அபிராமி அந்தாதி

பிரம்மம் என்றவுடன் இறைவன் என்பதாக சிலர் தவறான படிமானத்தில் உள்ளனர்

பிரமம் என்பது படைக்கப்பட்டது

பரமாத்மா பிரபஞ்சம் பரப்பிரமம் மூன்றும் ஒன்றே

நபராக சொன்னால் நாராயணன் அதிதேவர் ஆர்க் ஏஞ்சல் காப்ரியேல்

இறைவனுக்கு அடுத்தவர் ஆனால் இறைவனல்ல

ஆனால் படைப்புகள் அனைத்திற்கும் தலைவர்

அவருக்குள் அவர் மூலமாக அவரைக்கொண்டே சகலமும் படைக்கப்பட்டுள்ளது

மூவரும் தேவரும் முத்தரும் அறியா அருட்பெருஞ்ஜொதி என வள்ளல் பெருமான் சொல்கிறாரே அந்த மூவரில் நாராயணன் என்ற பரப்பிரமமும் அடக்கம்

முருகனை உபசாந்த சிவ சிற்பிரமன் சின்னபிரமன் என வள்ளலார் முந்தியபாடலில் சொன்னார்

மூவரும் முத்தரும் சித்தரும் அறியா அருட்பெருஞ்ஜோதி என வள்ளலார் பாடியதை இலக்கிய புகழ்ச்சி வார்த்தையாக புரிந்துகொள்ள வேண்டும்

சிவனுக்கும் நாராயணனுக்கும் பிரம்மாவுக்கும் தெரியாத அருட்பெருஞ்ஜொதி என
பாடிட்டாரு பாடிட்டாரு அதனால அவர்களையெல்லாம் உடைப்பிலே போடு என்பதுபோல
சன்மார்க்க விருட்டான் குஞ்சுகள் கூவித்திரிகின்றன

கவிஞர்களுக்கே உரிய புகழ்ச்சி அணி உயர்த்திபேசும் வார்த்தைகளை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்

தேரை ஊர் கூடி கொட்டடித்து வடம்பிடித்து இழுத்து நெம்பி தள்ளுவார்கள்

அடுத்த இடத்தில் போய் நின்றுகொள்ளும்

பிறகு மறுநாள் வந்து அதே மாதிரி நகட்டிவிட்டால் அடுத்த இடத்தில் போய் நின்றுகொள்ளும்

அதுபோலத்தான் ஆன்மீக வாழ்வும்

ஒரு மாயை அறியாமையை விட்டு நகட்டி விட்டால் அடுத்ததில் போய் சிக்கிக்கொள்ளும்

கடைசி நிமிஸம் வரை மாயை இருக்கும்

நாமனைவரும் இப்படித்தான் என ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்

யார் எது சொன்னாலும் அதில் கொஞ்சமாவது உண்மை இருக்கும்

என ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் மனநிலையை வருந்தி கற்றுக்கொள்ள வேண்டும்

நமது அனுபவத்தில் நின்று கொண்டு அடுத்த கருத்தை ஊகூம் ஊகூம் என எதிர்த்துக்கொணடே இருப்பது நமது மனதின் இயல்பு

வள்ளாரின் கடைசி கட்டளை

ஆண்டவர் வரும்வரை விசாரம் செய்துகொண்டிருங்கள் என்பதாகும்

விசாரம் ஆரோக்யமான தர்க்கம்

எதிலும் உண்மையிருக்கிறது

எதிலும் பொய்யும் கலந்து வருகிறது

ஆகவே எந்த கருத்தோடும் அதிலும் என்ன உண்மை இருக்கிறது என மாற்று மார்க்க கருத்துகளை உரசிப்பார்க்க வேண்டும்

ஒரு ஞானி பூமியில் இருக்கும்போது எதிர்க்கிற அசுர சக்திகள் அவர்
சென்றுபோனதும் அவரை துதிபாடுகிற சீடர்களோடு நல்லிணக்கமாகி விடுகின்றன

அவரைப்போல உண்டுமா என செம்படித்து அவரின் வார்த்தைகளுக்கு மெல்ல தவறான அர்த்தம் விளக்கம் கொடுக்க ஆரம்பித்துவிடுகின்றன

எதிர்ப்பதை விட கூட இருந்து கலப்படம் செய்வது வெற்றிகரமானது என்ற உபயத்தை அசுர சக்திகள் வாடிக்கையாக செய்கின்றன
வள்ளல்பெருமானின் வெற்றியின் ரகசியம் பக்தியோகியாக அருட்பெருஞ்ஜோதி இறைவனை பற்றிக்கொண்டிருந்ததுவே.

இன்று சன்மார்க்கத்தில் வளர்ந்து வருகிற ஆபத்து இறைவனை உணர்வற்றவராக சித்தரிப்பது

வள்ளல்பெருமானோ உணர்ச்சியுள்ள ஜீவனுள்ள இறைவனோடு உறவாடியவர்


Kanthar Kotta Manimalai 13






சைவமரபில் சிவனை வழிபடுவது போல சிவனடியாரைப்பேனுவதும் வழிபாடு என்பதாக நடைமுறை உண்டு .

குருவின் மேன்மை நம் இருளை அகற்றி நம்மை இறைவனை நோக்கி உயர்த்திவிடும் என்ற கருத்தை சடங்காச்சாரமாக சிவனடியார் வழிபாடு என்பதாக மாற்றிவிட்டார்கள்

இந்த கருத்தை வலியுறுத்தி நாயன்மார்கள் கதையையும் கூறினார்கள் . நாயன்மார்கள் என்ற தரத்தை அடையாதவர்களும் அதுபோல நடித்து பல பிழைப்புவாதிகள் ஆன்மீகத்தில் புகுந்து சீரழிவுகளையும் செய்தார்கள்

நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து
நான்நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும்
விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா
அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம்
உடையானே. - திருவாசகம் பாடல் எண் : 11

நான் என்ற சுயம் அகம்பாவமே வீடு பேறு அடைவதற்கான முயற்சியில் தடைக்கல்லாக வந்துவிடுகிறது ; ஆனால் யார் உண்மையான அன்பை இறைவன் மீதும் அவரது அதிதேவர்கள் மீதும் கொண்டவர்களோ ; பக்தியோகம் கைகூடியவர்களோ அவர்கள் ஒருபோதும் தன்னை துருத்திக்கொள்ளவே மாட்டார்கள் ; எப்போதும் கடவுளையே மேன்மைப்படுத்துவார்கள்

வள்ளல்பெருமானும் உன் மீது அன்புடைய நின் அடியார்களை குருவாக கொண்டு பக்தியோகம் விளைவிப்பவர்களுக்கு எந்த கெடுதலும் நேராது என்கிறார்

அவலமுறுமோ காமம் வெகுளிஉறுமோ மனத்
தற்பமும் விகற்பம் நேறுமோ

இல்லை என்கிறார்

வள்ளல்பிரான் முருகனிலிருந்து தொடங்கி ஒவ்வொரு தேவராக உபவாசித்து கடைசியாக அனைத்து தேவர்களையும் விட பெரியவரான அருவ ஏக இறைவனை அருட்பெருஞ்ஜோதி என கண்டுணர்ந்தவர்

இந்த அருட்பெருஞ்ஜோதி யின் அடியவர்கள் யார்

யார் என்றால் இறைவனுக்கு அடுத்த நிலையில் உள்ள நான்கு அதிதேவர்களான நாராயணன் ஆதிசேஷன நாராயனி சிவன் ஆகியோரே

இந்த நால்வரின் அடியை தன் முடியாக கருதக்கூடியவர்களே சகல மாயைகளிலிருந்தும் விடுபட கூடியவராவர்

அவ்வாறில்லாமல் மனித குருமார்களை வழிபடுவதென்பது அஞ்ஞானிகள் தங்களுக்கு தாங்களே புகழ் விரும்பிக்கொண்ட மாயையாகும்



Kanthar Kotta Manimalai 14






கானல்நீர் போல அளவற்ற மாயைகள் நம்மை பிடித்து ஆட்டுவித்துக்கொண்டுள்ளன .ஒரே ஒரு சின்ன விசயத்தை விட்டு வெளியே வர ஒரு பிறவி ஆகிவிடுகிறது . ஆனால் சற்குருநாதர் அறிவித்தால் எல்லா மாயைகளையும் கடந்து விட முடியும்

உண்மை ஒருபோதும் நாம் கண்டு பிடிப்பதல்ல ; சற்குருவால் உணர்த்துவிக்கப்படுவது

வள்ளல்பெருமானும் அளவற்ற விகாரம்உற நின்ற எனக்கு உண்மை அறிவித்த குருவே என்கிறார்

காற்றாற்று வெள்ளத்தில் சிக்கிய ஒருவன் ஒரு மரத்தை பிடித்து உச்சிக்கு ஏறுகிறான் ; அந்தோ அங்கு ஒதுங்கியிருந்த ஒரு திருடன் கத்தியை காட்டி மிரட்டி அவனின் அணிகளை பிடுங்கிக்கொள்கிறான்

எரிகிற விறகில் இருந்து தப்பி வாணலியில் ஏறி கொதிக்கிற எண்ணெய்க்குள் மரவண்டுகள் விழுவதை பார்த்திருக்கிறோம்

மாயைகள் ; வினைகள் நம்மை பிடித்து வாட்டும்போது மனிதர்கள் இப்படித்தான் தவிப்பார்கள்

கிளிஞ்சளுக்குள் வெள்ளி இருப்பதுபோல பளபளக்கும் . ஆனால் இருக்காது

தங்கமுலாம் பூசப்பட்ட பித்தாளை ஆபரணங்களால் எமாற்றப்படுவதுபோல

மனைஎன்றும் மகவென்றும் உறவென்றும் நிதிஎன்றும்
வாள்வென்றும் மானம்என்றும்

தற்காலிக உறவுகளையும் உலகத்தையும் கண்டு மயங்கிக்கொண்டு இருக்கிறோம்

இந்த உலகம் என்னை பரத்திற்கான தேடலுக்குள் முன்னேற விடாமல் மயக்கி மயக்கி பின்னோக்கி இழுக்கிறது

ஆனாலும் இறைவனின் கிருபை ; குருமார்களால் அவ்வப்போது உண்மைகள் உணர்த்துவிக்கப்படுகின்றன

அனுபவம் என்ற பாடம் மூலமாகவும் ; இறைவனால் குரு என்ற தகுதிக்கு உயர்த்தப்பட்ட நபர்களாலும் ; ஆவிமண்டல குருநாதர்களாலும் ஒவ்வொரு ஆத்மாவும் உயர்த்தப்பட இறைபேரரசு நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் உள்ளது



Kanthar Kotta Manimalai 15






வள்ளல்பெருமான் சாதாரண மனிதர்களின் மன மாயைகளை விட முடியாமல் தானும் தவிப்பதுபோல இறைவனிடம் முறையிடுகிறார்

சிறு வயதிலேயே அதிதேவர் நாராயணியே அண்ணியைப்போல வந்து உணவிடுவதை உண்டு வளர்ந்தவர் பெருமான்

அருள் உணர்வும் கலந்து ஊட்டப்பட்ட உணவை உண்ட பெருமான் காலம் கடந்துதான் அது ஒற்றியூர் வடிவாம்பிகை என்பதையுணர்ந்து அக்கோவிலில் சென்று அன்னையோடே தரித்திருக்கவும் தொடங்கினார்

வடிவாம்பிகை மணிமாலை பாடல்களை படித்தால் அப்பழுக்கில்லாத அன்னையின் அழகை அருளை பெருமானார் அனுபவித்தார் என்பது விளங்கும் . அத்தகையோரை அழியும் உடலின் ஆண்பெண் பேதங்கள் பாதிக்கவே பாதிக்காது

அபிராமி அந்தாதி

70: கண்களிக்கும்படி கண்டுகொண்டேன், கடம்பாடவியில் பண்
களிக்கும் குரல் வீணையும், கையும் பயோதரமும்,
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்க்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.

71: அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள், பனி மா மதியின்
குழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொம்பு இருக்க--
இழவுற்று நின்ற நெஞ்சே.-இரங்கேல், உனக்கு என் குறையே?

மாசு மறுவற்ற அழகு காமக் கிளர்ச்சி கொடுக்காது . தெய்வீகமே நிரம்பித்ததும்பும்

நிறைகுடம் ததும்பாது

குறைகளே மனிதர்களின் மனங்களில் காமக்கிளர்ச்சியை உண்டாக்குகின்றன

வள்ளல்பெருமானும் மனிதர்கள் படும் பாட்டை குறையாக ஒப்புவிக்கிறார்

வனிதயைர்கண் வலையினில்
பட்டுமதி கெட்டு ழன்றே
பாவமே பயில்கின்ற தல்லாது நின் அடிப்பற்ற அணுவும் அறிகிலேன்

இறைவனிடம் தாழ்மையாக நம் குறைகளை ஒப்புவித்தால் விடுபடும் வழியை அவரே உண்டாக்குவார்



Kanthar Kotta Manimalai 16






பாடுபட்டு தேடிய பணத்தை பூமியில் புதைக்கும் பாவிகாள்
கூடு விட்டு ஆவிதான் போனபின் கூட வருமோ

என சித்தர்பெருமக்கள் எச்சரித்தபடி அளவுக்கு அதிகமாக சேர்க்கும் பணம் முன்பு காலத்தில் பூமியில் புதைத்துக்கொண்டிருந்தார்கள்

இக்காலத்திலோ அது சுவிஸ் வங்கியில் அடக்கமாகி பேபரில் இவ்வளவு பணம் இருக்கிறது என பார்த்துக்கொள்கிறார்கள் . அதற்கு வட்டியும் கட்டுகிறார்கள்

தேவைக்கு அதிகமான பணம் சடமாகிப்போன ஒன்று

அது சேர்த்தவனுக்கு எந்த பலனும் கொடுக்காது

அந்த பணத்தை சேர்த்து சேர்த்து கண்ட தோஷம் - பணப்பித்து இன்னும் இன்னும் சம்பாதி என மன சஞ்சலத்தை மட்டுமே கொடுக்கும்

ஆரம்பத்தில் அந்த பணம் தன்னைத்தானே பெருக்கிகொள்வது போல இருக்கும்

ஆனால் வேதங்கள் அனைத்தும் பணத்தை வைத்து பணத்தை மட்டும் பெருக்குவது பாவம் என்றே சொல்கின்றன

வட்டி மாபெரும் பாவம்

பணத்தை ஏதாவது ஒரு தொழிலில் முதலீடு செய்து உற்பத்தி செய்வதோ ; பொருட்களை கொள்முதல் செய்து வணிகம் செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளது

ஆனால் வட்டி அனுமதிக்கப்படவில்லை

வட்டி கொடுத்து பணத்தை வாங்குவதும் அவ்வளவு எளிதான காரியமில்லை

வட்டிக்கு வாங்கியோர் பாடும் அடைப்பது அவ்வளவு எளிதானதல்ல

கெடுபிடிகளும் நோவுகளும் மாறி மாறி சாபத்தை உண்டாக்கி சேர்த்த பணத்தை தொலைப்பதை தவிர வேறொன்றும் அறியாத பிள்ளைகள் வந்து பிறப்பார்கள்

நாலைந்து தலைமுறையாக சேர்த்த பணத்தை ஒரே ஒரு வாரீசு தொலைத்துவிட்டு மண்டையை போடும்

பணம் வெளியேற தொடங்கியவுடன் ஒடுவதற்கென்றே பித்து பிடித்திருப்பது போல அந்தப்பணம் ஓடுமாம்

பணம் பத்தும் செய்யும் என்பதுபோல கபட நாடகம் போடும் ; விசமாகிப்போகும் ; வேலையை ஒழுங்காக செய்யவிடாது ; ஆங்காரத்தை கொடுக்கும் ; ஒழுங்காக இருக்க விடாது

இதை பணத்தாசை பிடிக்காதிருக்க அருளுவாயாக ; தேவைகள் சந்திக்கப்பட்டால் போதும் என பிரார்த்தனை செய்துகொண்டே ஓடிக்கொண்டிருக்க வேண்டும்

இல்லை என்று வருந்தாதபடி இறைவன் அருள்செய்வாரே தவிர அருளாளர்களுக்கு அளவுக்கு அதிகமாக இறைவன் கொடுப்பதில்லை

ஆனால் வறுமையில் உழலவும் விடுவதில்லை




Kanthar Kotta Manimalai 17







சுண்டைக்காயை உப்பிட்டு பாண்டத்தில் வைத்திருப்பார்கள் ; சிலநாட்கள் கெடாமல் இருக்கும்

சிலநாட்கள் பண்டம் கெடாமல் உப்பிட்டு பாதுகாக்க இயலும் ; ஆனாலும் நிரந்தரமல்ல

அதுபோன்றதே மனித உடலும் . உப்பிட்ட பாண்டம் போல சிலநாட்கள் பாதுகாப்பாக இருக்கிறது . அதில் நவதுவாரங்கள் உள்ளன . அவைகள் வழியாக கழிவுகள் வெளியேறிக்கொண்டே இருக்கின்றன ; ஆனால் அவைகளை மறைத்து ஒப்பனை செய்து சமாளித்து வருகிறோம்

கொஞ்சம் வியாதி வந்தால் கழிவுகள் நாற்றமெடுக்க தொடங்கிவிடும்

ஊத்தைச்சடலமடி ஒன்பது துவாரமடி என்ற சித்தர் பாடலை எல்லா மனிதர்களும் அறிவார்கள்

ஆனாலும் அதை நிலவென்றும் ; அருவி என்றும் மயிலென்றும் ; குயிலென்றும் ; தேனென்றும் மானென்றும் வர்ணித்து திரிவார்கள்

ஆனால் ஞானியரோ வினைதந்த
வெறுமாய வேடம்என்றும்
கப்புற்ற பறவைக் குடம்பைஎன் றும்பொய்த்த
கனவென்றும் நீரில்எழுதும்
கைஎழுத் தென்றும் கண்டுகொள்வர்

ஆனாலும் சாதாரண மனிதர்போல வள்ளல்பெருமானும் இந்த உடலை நம்பும் ஆசை எனக்கு போகவில்லையே ; அதை மகிமை என்பதாக அலட்டித்திரிவது எனக்கு போகவில்லையே என புலம்புகிறார்



Kanthar Kotta Manimalai 18






வாழையடி வாழையாக திருக்கூட்ட மரபில் வந்தவர் வள்ளல்பெருமான்

அதுமட்டுமல்ல அவரே முந்திய பல பிறவிகள் வந்து படிப்படியே வளர்ந்து இந்த உண்ணதமான நிலையை அடைந்தார்

அப்படியானால் முந்திய முந்திய பிறவிகளில் போதிய முழுமை இல்லாமலும் ; கொஞ்சம் மாயைகளை கடரா நிலையிலும் இருந்து போராடித்தான் இந்த முழுமையை அடைந்தார்

கொஞ்சம் மாயைகளோடு அவர் இருந்தார் என்பதற்கு இப்பாடலே சாட்சியாகும்

இது அவர் பாடிய பாடல்தான் என்பதை சன்மார்க்கிகள் யாரும் மறுப்பதற்கில்லை

இந்த பாடலை கொஞ்சம் கவனித்தால் கடும் பற்று என்ற மாயை ; மதம் என்ற மாயை மட்டுமல்ல அதன் தொடர்பாக மாச்சர்யம் என்ற பேத மன நிலை அவருக்கும் இருந்தது என்பதை அறியலாம்

பிற்காலங்களில் ; நான் அந்தளவு சிற்றறிவோடு இருந்தேன் என மனம் திறந்து வள்ளல்பெருமான் வாக்குமூலம் கொடுக்க தயங்கதில்லை

ஆனால் அவரை கடவுளாக ஆக்காமல் விடுவதில்லை என குரு பெருமை பேசித்திரியும் சிலர் இந்த உண்மையை உணரப்போவதில்லை

ஆறு மார்க்கங்களும் ஒவ்வொரு குருகுலமாகும்

அந்தந்த குருமார்க்கங்கள் தேவர்கள் அவரவர் ஆத்மாக்களை கடவுளை நோக்கி படிப்படியே உயர்த்தியே வருகின்றன

ஒரு குறிப்பிட்ட தரத்தை கடந்தபிறகே மற்ற குருகுலங்களை ஒப்புக்கொள்ளும் பொதுநோக்கு உண்டாகும்

அந்த ஒருமைப்பாடு சகல தேவர்களையும் கடந்த அருவ ஏக இறைவனே சகல தேவர்களாகவும் வியாபகம் ஆகி இறைபேரரசை நடத்தி வருகிறார் என்பதை உணர்ந்து ஒரே இறைவனான அருட்பெருஞ்ஜோதியானவருடன் ஒன்றினால் வருவது ஒருமைப்பாடு

இந்த ஒருமைப்பாடு மற்ற தேவர்கள் யாரையும் ஒதுக்காது ; இல்லவே இல்லை என மதம் பிடித்து கத்தாது

வள்ளல்பெருமானாரின் வார்த்தைகளில் சொல்வதானால் தேவரும் முத்தரும் சித்தரும் ஞானியரும் அந்த ஒரே இறைவனின் அருளைப்பெற்றே தம் தம் காரியங்களை செய்துவருகிறார்கள் என்பதாகும்

அந்த நிலையை அடைந்தபிறகே பெருமான் சொன்னார் ; ஆன்மநேய ஒருமைப்பட்டு உரிமையை நான் அடைந்துவிட்டேன் என்று

ஏனெனில் எந்த இறைவனோடு ஒன்றிவிட்டோமோ ; அதே இறைவனின் அருளைப்பெற்று இயங்கிவரும் தேவர்களும் நம்மை வெறுக்கப்போவதில்லை ; நாமும் தேவர்களை அவமதிக்கப்போவதில்லை

அனைவரோடும் அவர்தம் குருகுலங்கலோடும் நல்லினக்கமாகும் அந்த நிலையே ஆன்மநேய ஒருமைப்பாடு

சமரச சத்தியத்தின் அடித்தளம் இது

அதனால்தான் தன்னை மட்டுமே பூன் பிடித்து குருபெருமை பேசித்திரியும் சன்மார்க்கிகளிடம் பெருமான் சொன்னார் ; சமரசம் என்னவென்று இப்போது நான் சொன்னாலும் அதை புரிந்துகொள்ளும் தகுதி உங்களுக்கு இல்லை என்று

ஏற்கனவே பூமியில் உள்ள ஆன்மீக இயக்கங்களோடு நேயமாக - சமாதானமாக இருப்பதே ஆன்மநேய ஒருமைப்பாடு ஆகும் . இதுவே சமரச சத்தியத்தின் ஜீவனுமாகும்

ஆன்மநேய ஒருமைப்பாட்டை அடைந்தவர்கள் ; தங்கள் மார்க்கமல்லாத அடுத்த தேவர்களை பின்பற்றுகிறவர்களை வெறுக்கமாட்டார்கள்

தங்கள் தேவர்களை பின்பற்றாதவர்களையும் வெறுக்கமாட்டார்கள்

இந்த பாடலிலோ முருகனை வழிபடாத அடுத்த மார்க்கத்தாரை வள்ளல்பெருமான் கடுமையாக அர்ச்சிக்கிறார்

வைணவம் ; சாக்தம் ; கெளமாரம் என நாராயணனை ; அன்னையை ; அருவத்தை வழிபடுகிறவர்கள் முருகனை வழிபடுவதில்லை

ஆனால் அவர்களை பேயர்வாய் ; மூடர்தலை ; சொரிந்தஅழுகண் ; வீணர்செவி என்றெல்லாம் திட்டுகிறார்

மதமாச்சர்யம் என்ற மாயை அவரையும் ஆதியில் ஆட்கொண்டு இருந்தது ; ஆனால் இறைவனைக்குறித்த தாகம் அவரை ஏறாதநிலை நிலைமேல் பிற்காலத்தில் ஏற்றி வைத்தது என்பதை நடுநிலையோடு உணர்வோர் பேறுபெற்றோர்

மனிதர்கள் செய்யும் தவறுகளை ; இயல்புகளை தங்களது சொந்த இயல்பு போல ஏற்றுக்கொண்டு இறைவனிடம் மன்னிப்புகோரி வள்ளல்பெருமான் பாடியபாடல்கள் ஏராளம்

இவையெல்லாம் வள்ளல்பெருமானே அந்த தவறுகளுக்கு இடம் கொடுத்தவராக இருந்தார் என்று சொல்வதற்கில்லை ; ஆனால் தனது சீடர்களிடம் இந்த தவறுகள் எல்லாம் இருக்கிறது என்பதற்காக ; அதை அவர்கள் உணர்ந்து இறைவனிடம் மன்னிப்புகோரி திருந்தி முன்னேறவேண்டும் என்பதற்காக பெருமான் அப்படி பாடியிருக்கிறார் என்பதை பலமுறை நான் எழுதியுள்ளேன்

அதுபோலவே இன்றைய சன்மார்க்கிகள் தங்களை தனி ஒரு மதம்போல வளர்க்க முயற்சித்து ; மற்ற மார்க்கங்கள் யாவும் பொய் ; குப்பையிலே போடு ; ஒதுக்கிவிடு என ஆர்வக்கோளாறு கொள்ளும் காலம் வருகிறது என்பதற்காக தன்னையும் ஒரு மாச்சர்யம் உள்ள நபராக இப்பாடலில் காட்டிக்கொண்டுள்ளார்

இப்படியிருந்த பெருமானார் ; வளர்ந்து எப்படி ஆன்மநேய ஒருமைப்பாட்டுக்கு வந்துசேர்ந்தாரோ அப்படியே நாமும் சகல மதங்களோடும் மார்க்கங்களோடும் சமரசமாக ஆன்மநேய ஒருமைப்பாட்டை கற்றுக்கொள்வதே வள்ளல்பெருமானாருக்கு நாம் செய்யும் குருகாணிக்கை ஆகும்



முன்னுரை

சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் 9 வயதில் பிராட்வேயில் இலக்கணம் படிக்கும் படியாக பச்சயப்ப முதலியாரிடம் சேர்...