இறைவனின் புகழ் பாடுகிற வாய் அமுதுண்ணும் வாயாக தகுதி பெற்று விடும்
துதித்து போற்றுதல் என்பதை சகல ஞானிகளும் முக்கியப்படுத்துகிறார்கள்
எல்லாப்புகழும் இறைவனுக்கே
இறைவனே மிகப்பெரியவன்
இறைவனே பரிசுத்தர்
இறைவனே எல்லா தேவர்களுமாக வெளிப்பட்டிருக்கிறார்
இறைவன் இல்லாத எந்த சிருஷ்டியும் இல்லை
நாம் அறிந்த தேவர்களின் மூலமாக அறியாத இறைவன் ஆட்சி செய்கிறான்
என்று போற்றிப்புகழ்ந்து விட்டு நாம் அறிந்த தேவர்களின் புகழ் பாடுவதால் இறை பேராற்றல் நம்மில் வளர்ந்தோங்கும்
அதை கேட்போர் செவிகளும் அருளில் நிறைந்தோங்கும்
இதற்குத்தான் வாரம் ஒரு முறையாது சத்சங்கம் செல்லவேண்டும்
No comments:
Post a Comment