சைவமரபில் சிவனை வழிபடுவது போல சிவனடியாரைப்பேனுவதும் வழிபாடு என்பதாக நடைமுறை உண்டு .
குருவின் மேன்மை நம் இருளை அகற்றி நம்மை இறைவனை நோக்கி உயர்த்திவிடும் என்ற கருத்தை சடங்காச்சாரமாக சிவனடியார் வழிபாடு என்பதாக மாற்றிவிட்டார்கள்
இந்த கருத்தை வலியுறுத்தி நாயன்மார்கள் கதையையும் கூறினார்கள் . நாயன்மார்கள் என்ற தரத்தை அடையாதவர்களும் அதுபோல நடித்து பல பிழைப்புவாதிகள் ஆன்மீகத்தில் புகுந்து சீரழிவுகளையும் செய்தார்கள்
நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து
நான்நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும்
விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா
அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம்
உடையானே. - திருவாசகம் பாடல் எண் : 11
நான் என்ற சுயம் அகம்பாவமே வீடு பேறு அடைவதற்கான முயற்சியில் தடைக்கல்லாக வந்துவிடுகிறது ; ஆனால் யார் உண்மையான அன்பை இறைவன் மீதும் அவரது அதிதேவர்கள் மீதும் கொண்டவர்களோ ; பக்தியோகம் கைகூடியவர்களோ அவர்கள் ஒருபோதும் தன்னை துருத்திக்கொள்ளவே மாட்டார்கள் ; எப்போதும் கடவுளையே மேன்மைப்படுத்துவார்கள்
வள்ளல்பெருமானும் உன் மீது அன்புடைய நின் அடியார்களை குருவாக கொண்டு பக்தியோகம் விளைவிப்பவர்களுக்கு எந்த கெடுதலும் நேராது என்கிறார்
அவலமுறுமோ காமம் வெகுளிஉறுமோ மனத்
தற்பமும் விகற்பம் நேறுமோ
இல்லை என்கிறார்
வள்ளல்பிரான் முருகனிலிருந்து தொடங்கி ஒவ்வொரு தேவராக உபவாசித்து கடைசியாக அனைத்து தேவர்களையும் விட பெரியவரான அருவ ஏக இறைவனை அருட்பெருஞ்ஜோதி என கண்டுணர்ந்தவர்
இந்த அருட்பெருஞ்ஜோதி யின் அடியவர்கள் யார்
யார் என்றால் இறைவனுக்கு அடுத்த நிலையில் உள்ள நான்கு அதிதேவர்களான நாராயணன் ஆதிசேஷன நாராயனி சிவன் ஆகியோரே
இந்த நால்வரின் அடியை தன் முடியாக கருதக்கூடியவர்களே சகல மாயைகளிலிருந்தும் விடுபட கூடியவராவர்
அவ்வாறில்லாமல் மனித குருமார்களை வழிபடுவதென்பது அஞ்ஞானிகள் தங்களுக்கு தாங்களே புகழ் விரும்பிக்கொண்ட மாயையாகும்
No comments:
Post a Comment