வள்ளல்பெருமானாரைப்போன்ற இறை தூதுவர்கள் ; இறைவனால் அனுப்பப்பட்டவர்கள் சாதாரண மனிதர்களின் குற்றங்களை குறைகளை இயல்புகளை தமது குறைகள் போல தம் மீது ஏற்றிக்கொண்டு வேண்டுவார்கள்
அது அந்த வேண்டுதலை நாம் செவியுற்று இயைந்து வேண்டும்போது இறைவன் தமது அடியவருக்கு அருளும் அதே கிருபையை நமக்கும் அருளுவார்
தெளிவு குருவின் திரு வார்த்தை கேட்டல்
என்ற திருமந்திர வரிகள் மனித தரத்தில் குருமார்களாக உள்ள பலருக்கு பொருந்தவே பொருந்தாது
முழுக்குருடனுக்கு முக்கால் குருடனால் வழிகாட்ட இயலும்
அதிலும் அறைக்குருடனால் இன்னும் சிறப்பாக வழிகாட்ட இயலும்
கால் குருடனாலோ சக்கை போடு போட்டு பெருங்கூட்டத்திற்கு குருவாகிவிட முடியும்
ஆனாலும் எவருடைய அருட்பார்வையால் லட்சக்கணக்கானோருக்கு அற்புத அடையாளங்கள் நடக்கிறதோ ; எவருடைய வழிநடத்துதளால் சமுதாய மாறுதல் உண்டாகிறதோ அவர்கள் மனிதர்களிலிருந்து தரம் உயர்ந்து குருவானவர் அல்ல
பரத்திலிருந்து அனுப்பப்படுபவரால் மட்டுமே அத்தகைய அருட்பொழிவை இறைவன் செய்வார்
அவர்கள் காலத்தில் வாழ்ந்தோர் பேறுபெற்றவர்களே
அனுப்பட்டவரான வள்ளல்பெருமானும் மனித மனத்தின் இயல்பை நினைத்து துக்கித்து இறைவனிடம் வேண்டுகிறார்
வாய்விட்டு சொல்லவே முடியாது இறைவா அவ்வளவு தவறு செய்கிறதே எனது மனது
ரட்சிக்கும் உனது திருவடியில் ஒன்றாது மண்ணாசை ; பொன்னாசை ; பெண்ணாசையில் பட்டு உழல்கிறதே
கள் உண்டு பித்து பிடித்து கோலினால் ஒன்றை ஒன்று பேய் பிடித்தவை போல சலிக்காதது ஒன்றை ஒன்று மொத்திக்கொள்ளுமாம் குரங்குகள்
தாங்கள் அடிபடுவது அவற்றிக்கு தெரியாதாம் ; ஆனால் அடுத்தவை அடிபடுவதை பார்த்து ரசிக்குமாம்
அதனால் சண்டையிடுகிற இரண்டு குரங்கும் நிச்சயம் சாகும் என்பார்கள்
கிராமங்களில் இதைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்
குலாலன் வளைக்கும்போது திகிரியில் சுழலும் பானை விதவிதமாக வனைக்குமாம்
அதுபோலவே தராதரம் இல்லாத தகுதி இல்லாத பல வக்கனைகளை மனது சொல்லிக்கொடுக்குமாம்
பேதைகள் விளையாடுகிற பந்துபோல போகிற பக்கமெல்லாம் போகுமாம்
விலங்குகள் பசியினால் காய்ந்து போய் எங்கே உணவு கிடைக்காதா என அலைபாய்ந்து கொண்டே இருக்குமாம்
இறைதேடுதல் ஒன்றே விலங்குகளின் முழுநேர வாழ்க்கை யாக இருப்பதை சேனல்களில் நீங்கள் பார்க்கலாம்
ஒன்றை ஒன்று வேட்டையாடி சாகின்றன
அலைகின்றன அலைகின்றன அடித்து போராடி அடிபட்டு கொன்று சாப்பிடுகின்றன
பின்னொருநாளில் சாகின்றன
ரஜோ குணம் பலரை அழித்து தன்னை விட வல்லவனிடம் அழிந்துவிடுகிறது
பெரும் காற்றில் சுழன்று திரிவதைப்போல திரிகிறது
எனது கர்மாவின் தொடர்பாக இருந்தாலும் காலத்தின் கோலமாக இந்திரஜாலமோ மாயாஜாலமோ என் மாயைகளை உற்பவித்துக்கொள்கிறது
வள்ளலே உன் கிருபையாலன்றி நான் ரச்சிக்கப்படுவது அவ்வளவு எளிதல்ல
No comments:
Post a Comment