வள்ளலார் சின்ன வயதிலேயே கவிதைகள் புனையும் நாட்டம் இருந்ததால் ; தன்னை ஒரு புலவர் என்பதாக அங்கீகரித்துக்கொள்கிறார்
புலவர்கள் வாழ்க்கைக்கு என்ன செய்வார்கள் ?
அரசர்களையோ ; செல்வந்தர்களையோ அண்டி புகழ்ந்து பாடி பரிசில் பெறுவார்கள்
அல்லது நாடக குழுக்களில் சேர்ந்து பாடி நடிப்பார்கள்
இக்காலத்திய சினிமா உலகம் போல அக்கால கலைத்துறை இல்லை
மிகுந்த வறுமை ; அவமானம் பட்டே அரைக்கஞ்சி குடிப்பார்கள்
வள்ளல்பெருமான் முருகனிடம் அந்த இழி வாழ்வு தனக்கு வேண்டாம் என்று வேண்டுகிறார்
செல்வந்தர்கள் பெரும்பாலும் எப்படி இருப்பார்கள் ; பாய்ந்து இரையை பிடிக்கிற புலியை போல பொருள் சம்பாதிப்பதிலேயே கவனமாக இருப்பார்களாம்
அதுமட்டுமல்ல அதற்காக நாயாக அலைவார்களாம்
இப்படி பொருள் சேர்த்தோர் குடும்பத்தையே அண்டி ; அவர்களை புகழ்ந்து பரிசில் பெறுவது அவ்வளவு எளிதான காரியமும் அல்ல .
அவர்கள் வீட்டு பழங்கஞ்சி யை காத்திருந்து பெறுவது தேவாம்ரிதத்தை பெறுவதற்கு பிரயத்தனம் செய்வதை விட கடினமாக இருக்குமாம்
அல்லது புல்லு வெட்டியாவது பிழைப்போம் ; கல்லுடைத்தாவது கஞ்சி குடிப்போம் என்பதும் பிகீரத பிரயத்தனம் . தன்மானத்தோடு உழைத்தாலும் தவிடும் உமியும் தான் பலனாக இருக்குமாம்
இப்படி எல்லாம் இல்லாமல் பிறகு எப்படிப்பட்ட வாழ்க்கை வள்ளலாருக்கு வேண்டுமாம்
தாய் போன்ற கருணை உள்ள மறை முடியோன் சிவனின் சேயோன் முருகனுக்கு அடிமையாக ஆகி கொண்டால் ; அருள் நிரம்பிய வாழ்வும் ; மெய்ப்பொருள் நிரம்பிய நிறைவு மனமும் ; இறைவனால் போதிய அளவு கிடைக்கப்பெறும் நிம்மதியும் கிடைக்குமாம்
உலகத்திற்கு அடிமையாக இருந்து உலழுவதை விட இறைவனுக்கும் ; தேவர்களுக்கும் அடிமை ஆக்கிக்கொண்டால் நிறைவான நிம்மதியான வாழ்வை பெறலாம் என்கிறார் 9 வயது வள்ளலார்
அவர் எண்ணம் போலவே அவரது வாழ்க்கையும் இருந்தது
No comments:
Post a Comment