இதுவரை பார்த்தவர்கள்

Sunday, 3 May 2020

Kanthar Kotta Manimalai 21






பரலோகம் என தனித்துவமான அமைப்பு ஒன்று இருக்கிறதா ?

நாத்திகவாதிகளுக்கு அல்ல ஆன்மீகர்கள் பலருக்கே அப்படிப்பட்ட நம்பிக்கை இல்லை

அவர்கள் வெறும் இயற்கை தான் இருக்கிறது என புரிந்துகொண்டிருக்கிறார்கள்

இயற்கை அனுபவமாகவும் இயற்கை ஆனந்தமாகவும் அருட்பெருஞ்சோதி இறைவன் இருப்பதாக வள்ளல்பெருமான் சொல்லியுமுள்ளதை இறைநிலை என்பது படர்க்கை என்றுமட்டுமே சன்மார்க்கிகள் பலர் தவறாக வியாக்கியானம் செய்கிறார்கள்

அருட்பா பாடியபிறகு சித்தி அடையுமுன்பு பெருமான் உபதேசம் செய்ததில் தன் முழு அனுபவங்களையும் தொகுத்து கொடுத்துள்ளார்

அதில்

இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமில்லை. சுவர்க்க நரக விசாரமுள்ளவர்கள் தங்கள் கருத்தின்படி பலவகைச் சாதனங்களைச் செய்து அற்ப பிரயோஜனத்தைப் பெற்று, முடிவில் தடைப்பட்டுத் திருவருட்டுணையால் கருணை நன் முயற்சியெடுத்துக்கொண்டு, பின் முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார்கள். அஃது அருமை.

அவ்விசாரம் பரம், அபரம் என்ற இரண்டு வகையாயிருக்கின்றது.

இவற்றில்
பரம் பரலோக விசாரம், அபரம் இகலோக விசாரம்.

இவ்விரண்டில் இகலோக
விசாரம் விசார மல்ல. சாதாரணமாக ஒருவன் வி-சாரம் செய்து
கொண்டிருக்கின்றானே யென்றால்,அவ்விசாரம் விசாரமாகாது, உண்மை
விசாரமுமல்ல.

ஏனெனில், விசார மென்கின்றதுற்குப் பொருள், வி-சாரம் என்பதில்
வி-சாதாரண உலக _விசாரத்தை மறுக்க வந்தது, அது மேலும் பரலோகவிசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது.

சுவர்க்க நரக விசாரம் பலருக்கு இல்லை . அதைக்குறித்த அச்சம் இல்லாமல் இறைவனை அஞ்சாமல் பலர் வாழ்கிறார்கள் என வருந்துகிறார் பெருமானார்

அப்படிப்பட்ட அச்சத்தை போதிக்கும் மதங்கள் பலவற்றை பின்பற்றுவோர் ; இறைவனை குறித்த போதிய தெளிவு இல்லாமல் இருப்பதாகவும் அற்ப பிரயோஜனம் மட்டுமே பெறுகிறார்கள் என்கிறார்

இருந்தாலும் முடிவு காலத்திலே இறைவனின் திருவருளால் அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்றே பெருமானார் கூறுகிறார்

இதை ஏன் சொல்கிறேன் என்றால் இன்றைய சன்மார்க்கிகளும் சுவர்க்க நரக நம்பிக்கை அற்றவர்களாகவே இருக்கிறார்கள்

சுவர்க்க நரக விசாரம் இல்லாமல் முழுமையான சித்தியை அடையவே முடியாது

சித்தியடைந்து எங்கு செல்லப்போகிறோமோ அந்த இலக்கு இலட்சியம் தெரியாதவர்கள் முன்னேற்றம் அடைவது எப்படி ?

பெருமானார் ஒளிதேகம் அடைந்தார் என்று பெருமையாக பேசும் சன்மார்க்கிகள் அவர் எங்கு போனார் என்றால் திரு திருவென முழிக்கிறார்கள்

ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்ற பஞ்ச் டயலாக்கை சொல்கிறார்கள்

சாப்பாடு போடுகிறார்கள் ; காய்கறி நறுக்கி போஸ் கொடுக்கிறார்கள் ; அருட்பெருஞ்சோதி அகவல் படிக்கிறார்கள்

மோட்ச வீடு என்பதை அக்கறை இல்லாமல் கவணிக்காமல் விட்டுவிடுகிறார்கள்

நாம் போய் சேர வேண்டிய இடம் மோட்ச வீடு

சொர்க்கம்

இவ்விசயம் மதவாதிகளுக்கு நன்கு தெரிந்திருக்கிறது ; ஆனால் மற்ற விசயங்களில் தெளிவில்லாததால் அற்ப பிரயோஜனம் அடைகிறார்கள்

நல்ல வழி நன்றாக தெரிந்த சன்மார்க்கிகளோ வழியை தெரிந்திருக்கிறார்கள் ; அந்தோ கொடுமையே போய் சேர வேண்டிய இடத்தை மறந்துவிட்டார்கள்

அதனால் திறமையாக பூமியிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்

இந்த பாடலில் பெருமான் தன் சீடர்களின் குறைகளை தன் குறை போல பாடுகிறார்

சொர்க்க நரகமா அப்படி ஒன்றும் இல்லை

அமுத பானம் ஒன்றா அப்படியெல்லாம் இல்லவே இல்லை

சாகாகல்வி என பெருமான் சொன்னதால் கிளிப்பிள்ளை போல நாங்களும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்

மற்றபடியாக தேவர்களாக மாறி பரலோக வாழ்வுக்கு செல்லவேண்டும் என்ற முயற்சி எங்களுக்கு சுத்தமாக கிடையாது

இப்படி இருக்கிறவர்களை யார் திருத்துவது என்றால் பரத்திலிருந்து அவ்வப்போது பூமிக்கு அனுப்பபடுகிற இறைமனிதர்களே ஆகும்

வள்ளல்பெருமான் உட்பட அப்படி பூமிக்கு வருவோரெல்லாம் பொதுவாக மு

ருகனே ஆகும்

அப்படி இப்படி வல்லமையான கொடூரமான அசுரர்களை வீரத்தின் மூலமாக வெற்றி கொண்ட முருகன் அவர்களை அழித்தாரா ?

மறக்கருணை ஈந்தார்

அவர்களை சேவலாக மாற்றி தனக்கு பிரச்சாரம் செய்கிறவர்களாக மாற்றிக்கொண்டார் அல்லவா ?

அதுபோல முருகா சொர்க்க நரக விசாரம் இல்லாத என் சீடர்களான சன்மார்க்கிகளையும் நீ நல்வழிப்படுத்துவாயாக என வேண்டுகிறார் வள்ளல்பெருமான்

No comments:

Post a Comment

முன்னுரை

சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் 9 வயதில் பிராட்வேயில் இலக்கணம் படிக்கும் படியாக பச்சயப்ப முதலியாரிடம் சேர்...