இதுவரை பார்த்தவர்கள்
Monday, 7 September 2020
முன்னுரை
சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் 9 வயதில் பிராட்வேயில் இலக்கணம் படிக்கும் படியாக பச்சயப்ப முதலியாரிடம் சேர்ப்பிக்க பட்டபோது வகுப்பில் நாட்டமில்லாது அடிக்கடி காணாமல் போகிறார் என்ற புகார் அண்ணன் சபாபதிக்கு செல்கிறது
ஒரு நாள் அண்ணன் ஒளிந்திருந்து கண்காணிக்கிறார் . மெதுவாக ராமலிங்கம் அங்கிருந்த கந்தர்கோட்டம் முருகன் கோவிலுக்குள் செல்கிறார்
அங்கு கருவறைக்கு அருகில் தூண் அருகில் அமர்ந்துகொண்டு முருகனை பார்ப்பதும் முணுமுணுப்பாதுமாக இருக்கிறார்
சில நிமிடங்கள் கழித்து அவரை பிடித்து அடிக்கிறார் அண்ணன் சபாபதி . இழுத்து கொண்டு சென்று முதலியாரிடம் ஒப்படைக்கிறார்
சிலநாள் கழித்து மீண்டும் பிள்ளை காணாமல் போகவும் இம்முறை பச்சயப்ப முதலியாரே கந்தர்கோட்டத்திற்குள் செல்கிறார்
அங்கு பூசாரி யாராவ்து பாடுங்களேன் என்று சொன்னதும் தன்னையறியாமல் பிள்ளை 30 கவிதைகள் பாடுகிறது . ஆசு கவி என்ற மிகவும் சிக்கலான இலக்கணத்தோடு மிக நேர்த்தியாக பாடப்பட்ட கவிதைகளை கேட்டு ஆசிரியர் திக்கித்து போகிறார் .
மனித முயற்சியால் இப்படி பாட முடியாது என உணர்ந்த ஆசிரியர் பிள்ளையிடம் தாள குணிந்து அப்பா உனக்கு இலக்கணம் கற்பிக்கும் அளவு தகுதி எனக்கில்லை என்கிறார்
இதே போலவே அண்ணனிடமும் தெரிவிக்க அவர்கள் முடிவு எடுக்க முடியாமல் தண்ணீர் தெளித்து விடுகிறார்கள்
எங்காவது போ என்னவாவது செய் என விடப்பட்டவர் பல நாளாளவும் காணாமல் போவதும் வருவதுமாக ஆகி விட்டது .
இதன் பின்னணி யாதென்றால் முருகனே தணிகைமணி பிரான் என்பவராக வள்ளலாருக்கு மட்டுமே தெரிகிற நபராக வந்து அவரை அழைத்து செல்வதும் பயிற்சி கொடுப்பதுமாக நடந்திருக்கிறது
கந்தர் கோட்ட மணிமாலை பாடல்களே அவரது முதல் பாடல் என பலர் சொன்ன போது திருத்தணி முருகன் முருகன் முன்பு பாடியபாடலே முதல் பாடல் என்றார் வள்ளலார்
திருத்தணிக்கு 9 வயதுக்கு முன்பு யாரும் அவரை அழைத்து செல்லாத போது ; இது எப்படி சாத்தியம் ?
தணிகைமணி பிரானே சூட்சுமமாக அவரை அழைத்து சென்றவர்
வள்ளல்பிரான் தணிகைமணிபிரானால் வழிநடத்தப்பட்டவர்
ஆவிமண்டல குருநாதர்களால் வழிநடத்தப்படுபவர்களால் மட்டுமே உலகத்திற்கு மேன்மைகளை
கொண்டு வர முடியும்
ஆகவேதான் ஞான நிலையில் நின்று கந்தர் கோட்ட மணிமாலையை வெளிக்கொணர முடிந்திருக்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
முன்னுரை
சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் 9 வயதில் பிராட்வேயில் இலக்கணம் படிக்கும் படியாக பச்சயப்ப முதலியாரிடம் சேர்...
-
சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் 9 வயதில் பிராட்வேயில் இலக்கணம் படிக்கும் படியாக பச்சயப்ப முதலியாரிடம் சேர்...
-
இறைவனின் புகழ் பாடுகிற வாய் அமுதுண்ணும் வாயாக தகுதி பெற்று விடும் துதித்து போற்றுதல் என்பதை சகல ஞானிகளும் முக்கியப்படுத்துகிறார்கள் ...
-
9 வயது குழந்தையை பூசாரி ஏதாவது பாடு என சொன்னதால் பாட முயற்சிக்கிறது அதுவோ உய்கின்ற நாள் எந்த நாள் உய்கின்ற நாள் எந்த நாள் என புலம்புக...
கந்தர் கோட்ட மணிமாலை
ReplyDelete